MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நெருங்கும் தீபாவளி பண்டிகை! பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நெருங்கும் தீபாவளி பண்டிகை! பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு அறிவுரைகள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 13 2025, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தீபாவளி பண்டிகை
Image Credit : our own

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நாளில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுமக்களால் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய நல்ல நாளில், சில இடங்களில் மக்களின் கவனமின்மை, அலட்சியமாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறார்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகளை பள்ளி மாணவ மற்றும் மாணவியர் பின்பற்றிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தக்க அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியின் தகவல் பலகைகளில் ஒட்டி நலத்திட்டங்கள் பெற வரும் மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

27
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம்
Image Credit : our own

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம்

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநரின் கடிதத்தில் பின்வருமாறு தீபாவளி பண்டிகை 2025, தீபாவளி பண்டிகையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்பாக பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பட்டாசுகளை கொளுத்துபோது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டான் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.

* பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒருவாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள் கால்களில் காலணி அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும்.

Related Articles

Related image1
தமிழக அரசு அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு..! இருமல் மருந்து ரங்கநாதன் இடத்திலும் சோதனை!
Related image2
வாரத்தின் முதல் நாளே இப்படியா! தமிழகம் முழுவதும் இன்று 7 மணி நேரம் மின்தடை!
37
பள்ளி மாணவர்கள்
Image Credit : Asianet News

பள்ளி மாணவர்கள்

* பட்டாசுகளை கொளுத்தி, கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். வெடிகளை வெடிக்கச் செய்ய நீளமான ஊதுவர்த்தியினை பயன்படுத்தி பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வெடிக்கச் செய்ய வேண்டும்.

* மூடிய பெட்டிகளில் மற்றும் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கச் செய்யாதீர்கள்.

* ராக்கெட்டுகள் உள்ளிட்ட பட்டாசுகளை வெட்ட வெளியில் உள்ள குடிசைகளுக்கு அருகில் அல்லது கீற்றுக் கொட்டகைகளுக்கு அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

47
சாலைகளிலும் வெடிக்காதீர்கள்
Image Credit : Asianet News

சாலைகளிலும் வெடிக்காதீர்கள்

* பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்காதீர்கள்.

* பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்காதீர்கள்.

* குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.

57
 மருத்துவமனைகளில் வெடிக்க கூடாது
Image Credit : Asianet News

மருத்துவமனைகளில் வெடிக்க கூடாது

* நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனைகளுக்கு அருகாமையிலோ அல்லது நோயாளர் பாதுகாப்பு இல்லங்கள் போன்றவற்றிற்கு அருகாமையிலோ பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

* விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். மேலும் பறவைகள் அடைக்கலமாகும் பகுதிகளிலும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதை தவிர்க்க ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்.

* பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கவோ, கொளுத்தவோ செய்யாதீர்கள்.

67
சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்
Image Credit : Asianet News

சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்

* அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.

* வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும்.

* விவரம் அறியாத இளஞ்சிறார்களை வெடிகளைக் கொளுத்த அனுமதிக்காமல் இருத்தல் வேண்டும்.

* இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

77
 மின் சாதன பொருட்கள்
Image Credit : Asianet News

மின் சாதன பொருட்கள்

* உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஆகியோர் பட்டாசு வெடிக்கும்பொழுது வந்தால் அவர்கள் பாதுகாப்பாக கடந்து சென்ற பின்னர் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

* பட்டாசுகளை மின் சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உருளை அருகில் வைத்து வீடுகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளி
ஆசிரியர்
தீபாவளி விடுமுறை
தீபாவளி பண்டிகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
தமிழக அரசு அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு..! இருமல் மருந்து ரங்கநாதன் இடத்திலும் சோதனை!
Recommended image2
வாரத்தின் முதல் நாளே இப்படியா! தமிழகம் முழுவதும் இன்று 7 மணி நேரம் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved