MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் சென்னையில் குறிப்பிட்ட தேதிகளில் விநியோகம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 05 2025, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் பொருட்களை நேரில் சென்று வாங்க சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 65 வயதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

24
Image Credit : x/ ai image

இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அந்தந்த மாவட்டங்களுக்கான தேதியை அறிவித்தனர். அதன்படி சென்னை மண்டலத்துக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
Related image2
வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
34
Image Credit : tndipr

இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம் பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

44
Image Credit : tndipr

இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி. க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
Recommended image2
வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved