MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! உடனே செயல்படுத்துங்க- முதல்வருக்கு சென்ற முக்கிய அறிக்கை

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! உடனே செயல்படுத்துங்க- முதல்வருக்கு சென்ற முக்கிய அறிக்கை

Old Pension Scheme : தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் உடனே ஓய்வூதிய அறிவிப்பை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 22 2025, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம்
Image Credit : our own

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்திப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் எந்த ஓய்வூதிய திட்டம் சிறந்தது என ஆய்வு செய்த குழு அமைத்துள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவானது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. 

இதனையடுத்து இந்த குழுவானது தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. இந்த குழு ஆய்வு செய்து எந்த ஓய்வூதிய திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு என்ன பயன், அரசுக்கு கூடுதலாக ஏற்படும் செலவுகள் தொடர்பாக அறிக்கையை கொடுக்கவுள்ளது.

25
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்
Image Credit : our own

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்

இந்த நிலையில் பாமக நிறுவனர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பணி அலுவலர்கள் தங்களது பணி ஓய்வுக்கு பின், பிறரது தயவினை எதிர்பார்க்காமல் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு சட்டங்கள் மூலம் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் சேவைப் பணியான அரசு பணி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, 

மத்திய அரசு ஓய்வூதிய நிதியினை பராமரிக்க ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தை உருவாக்கி அதன் வாயிலாக நிதி மேலாண்மை செய்யும் நிலையில், தமிழக அரசு இந்த ஆணையத்தில் சேராததால் 31.3.2025 வரை ஓய்வு பெற்ற சுமார் 45,625 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

Related Articles

Related image1
அடுத்தடுத்து இன்ஜின் கோளாறு..! வந்தே பாரத் ரயிலால் 4 மணி நேரம் அவதிக்குள்ளான பயணிகள்
Related image2
தேசிய கல்வி கொள்கை.. மாணவர்களின் கல்வியில் அரசியலை திணிக்காதீர் - தர்மேந்திர பிரதான் விளக்கம்
35
பெயரளவில் மட்டுமே ஓய்வூதிய திட்டம்
Image Credit : our own

பெயரளவில் மட்டுமே ஓய்வூதிய திட்டம்

பணிக்கொடை கூட அரசு ஊழியர்களுக்கு வழங்கபடவில்லை. அரசின் பங்களிப்பு தொகை மட்டும் வட்டியுடன் மொத்தமாக அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது. அரசு ஊழியர்கள் பணியின் போது இறக்கும் தருவாயிலும், உடல் நல குறைபாடு ஏற்பட்டு பணியிலிருந்து விலகும் தருவாயில் அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு எவ்வித சட்டபூர்வமான நிதி உதவியும் வழங்கப்படுவதில்லை. 

தமிழ் அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் பெயரளவில் மட்டுமே ஓய்வூதிய திட்டமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தாராள மனப்பான்மையுடனோ, கருணைத் தொகையோ அல்ல, மாறாக அரசினால் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டிய அவர்கள் பணிக்கான அடிப்படை உரிமையாகும்.

45
ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறை
Image Credit : Asianet News

ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறை

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை செலவினங்களாக கருதாமல் அரசின் திட்ட செலவினங்களில் ஒரு அங்கமாக கருத வேண்டும். போதுமான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அறிவார்ந்த நபர்களை அரசுப் பணிக்கு ஈர்ப்பதோடு, அரசு துறையின் மாண்பும் காக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைகின்றன. 

இந்தியாவிலும் சட்டீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் அடைந்துள்ளன. ஆதலால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கினால் நிதி இழப்பு ஏற்படும் என்பதும், திட்டங்களை செயல்படுத்த இயலாமல் போய்விடும் என்பதும் ஏற்புடையதல்ல.

55
உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துங்க
Image Credit : our own

உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துங்க

அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதிலும், இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள், பெருநோய் தொற்றுகள் போன்ற அத்தியாவசிய சமயங்களிலும் தொய்வின்றி பணியாற்றும் அரசு அலுவலர்கள், 

எதிர்கால தலைமுறையை வளமானதாக மாற்றும் ஆசிரியர்களுக்கும் மக்களுக்காக பணியாற்றுபவர்களின் நியாயமான கோரிக்கையை இனியும் கிடப்பில் போடுவது ஏற்புடையது அல்ல. கடந்த 22 ஆண்டுகளாக போராடிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுக ஆட்சியில் மகளிருக்கு எவ்வளவு செய்திருக்கிறோம் தெரியுமா..? டேட்டாவை அடுக்கிய தங்கம் தென்னரசு!
Recommended image2
இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக
Recommended image3
சட்டமன்றத்தில் காது குத்தும் விழா.. பட்ஜெட்டை கலாய்த்து அதிமுக விடுத்த அழைப்பிதழ்
Related Stories
Recommended image1
அடுத்தடுத்து இன்ஜின் கோளாறு..! வந்தே பாரத் ரயிலால் 4 மணி நேரம் அவதிக்குள்ளான பயணிகள்
Recommended image2
தேசிய கல்வி கொள்கை.. மாணவர்களின் கல்வியில் அரசியலை திணிக்காதீர் - தர்மேந்திர பிரதான் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved