MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகிறதா மழை? வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகிறதா மழை? வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் ஜூலை 14 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை பொதுவாக மாற்றமின்றி காணப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 08 2025, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இடி, மின்னலுடன் கூடிய மழை
Image Credit : Google

இடி, மின்னலுடன் கூடிய மழை

தமிழகத்தில் மீண்டும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 14 வரை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

24
லேசானது முதல் மிதமான மழை
Image Credit : Google

லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் ஜூலை 10 முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
அதிமுக கோட்டையில் போட்டியிட விரும்பும் டிடிவி தினகரன்? எந்த தொகுதி? என்ன காரணம்?
Related image2
பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
34
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
Image Credit : Asianet News

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் ஜூலை 10 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் ஜூலை 10 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

44
சென்னை வானிலை முன்னறிவிப்பு
Image Credit : our own

சென்னை வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
அதிமுக கோட்டையில் போட்டியிட விரும்பும் டிடிவி தினகரன்? எந்த தொகுதி? என்ன காரணம்?
Recommended image2
பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved