MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொட்டிக்கிடக்கும் தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

கொட்டிக்கிடக்கும் தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

கனமழையால் தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்த நிலையில், தற்போது வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி தரத்தை பொறுத்து கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் இங்கே காணலாம்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 19 2025, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமையலும் காய்கறிகளும்
Image Credit : our own

சமையலும் காய்கறிகளும்

சமையல் என்றாலே காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கும், குறிப்பாக ரசம், சாம்பார், பொறியல், கூட்டு, பிரியாணி என அனைத்து வகையான சமையலுக்கும் காய்கறிகள் தேவைப்படுகிறது. இதில் எந்த காய்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு மக்கள் வாங்கி செல்வார்கள். 

பை நிறைய இந்த இரண்டு காய்களை மட்டுமே அதிகளவில் வாங்கி செல்வார்கள். ஆனால் இதன் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை திண்டாட்டம் தான். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதுவரை இல்லாத வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது.

25
தக்காளி, வெங்காயம் விலை
Image Credit : Asianet News

தக்காளி, வெங்காயம் விலை

ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கும், வெங்காயம் 150 ரூபாயையும் தாண்டியது. இதனால் ஏழை எளிய மக்களா வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தக்காளி வெங்காயம் இல்லாமல் சமைக்க தொடங்கினர். ஆனால் அடுத்த சில மாதங்களில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலையானது சரசரவென சரிந்தது. 

ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலையானது அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது.

Related Articles

Related image1
சென்னை டூ வேளாங்கண்ணி; நாகர்கோவில் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள்! எந்தெந்த தேதி? முழு விவரம்!
Related image2
Tamil News Live today 19 August 2025: இன்றைய TOP 10 செய்திகள் - சர்ப்ரைஸ் கொடுத்த இந்திய அணி... இஸ்ரோவின் அடுத்த ராக்கெட்
35
தக்காளி விலை என்ன.?
Image Credit : our own

தக்காளி விலை என்ன.?

இதனால் குறைந்த அளவிலேயே காய்கறிகள் சந்தைக்கு வருகிறது. ஒரு கிலோ தக்காளி விலை 40 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி தரத்தை பொறுத்து விற்பனை விலை மாறுபடுகிறது. 

சிறிய அளவிலான தக்காளி 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ரக தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தரமான தக்காளி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் ஒரு கிலோ வெங்காயம் 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

45
பச்சை காய்கறிகளின் விலை
Image Credit : Asianet News

பச்சை காய்கறிகளின் விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையை தற்போது பார்க்கலாம், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்,

 குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55
சற்று குறைந்த காய்கறிகள் விலை
Image Credit : Asianet News

சற்று குறைந்த காய்கறிகள் விலை

கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,

 முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
காய்கறி விலை
விவசாயம்
வெங்காயம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
சென்னை டூ வேளாங்கண்ணி; நாகர்கோவில் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள்! எந்தெந்த தேதி? முழு விவரம்!
Recommended image2
Tamil News Live today 19 August 2025: இன்றைய TOP 10 செய்திகள் - சர்ப்ரைஸ் கொடுத்த இந்திய அணி... இஸ்ரோவின் அடுத்த ராக்கெட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved