MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எம்ஜிஆர், ஜெயலலிதாமாதிரி இல்ல... ஈபிஎஸ் நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டார் - பிரேமலதா குமுறல்

எம்ஜிஆர், ஜெயலலிதாமாதிரி இல்ல... ஈபிஎஸ் நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டார் - பிரேமலதா குமுறல்

கூட்டணி ஒப்பந்தத்தை பின்பற்றாமல் எடப்பாடி பழனிசாமி தேமுதிக.வினரின் முதுகில் குத்திவிட்டதாகக் கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Sep 01 2025, 06:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசியல் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம்
Image Credit : Google

அரசியல் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.

24
தேமுதிக பூத் கமிட்டி மீட்டிங்
Image Credit : Google

தேமுதிக பூத் கமிட்டி மீட்டிங்

இதனிடையே தென்சென்னை பூத் கமிட்டி முகவர்கள் கூட்டமானது சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

Related Articles

Related image1
அதிமுக கட்சி விதி; வழக்கு தொடர கண்டிஷன் போட்ட நீதிமன்றம் - உச்சபட்ச கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
Related image2
எல்லாத்தையும் குறை சொன்னா எப்படி? பவுன்சர்கள் மேல எந்த தப்பும் இல்ல.. விஜய்க்கு பிரேமலதா சப்போர்ட்!
34
முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி
Image Credit : Google

முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி

அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தேமுதிக.வுக்கு எம்.பி. சீட் ஒதுக்குவதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது உண்மை தான். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி இதற்கான ஆதாரத்தை நாம் வெளியிடவில்லை.

முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி ஒப்பந்தங்கள் தேதி குறிப்பிடாமல் இறுதி செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமியுடனும் தேதி குறிப்பிடாமல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி நம்மை ஏமாற்றி விட்டார்.

44
பணம் கொடுத்து அழைத்து வரப்படும் மக்கள்
Image Credit : Asianet News

பணம் கொடுத்து அழைத்து வரப்படும் மக்கள்

எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்திற்கு வரும் மக்கள் அனைவரும் பணம் கொடுத்து தான் அழைத்து வரப்படுகிறார்கள். ஆனால், நாம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. அதனால் அவர்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது இல்லை என்று கூறியுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரேமலதா விஜயகாந்த்
எடப்பாடி பழனிசாமி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
அதிமுக கட்சி விதி; வழக்கு தொடர கண்டிஷன் போட்ட நீதிமன்றம் - உச்சபட்ச கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
Recommended image2
எல்லாத்தையும் குறை சொன்னா எப்படி? பவுன்சர்கள் மேல எந்த தப்பும் இல்ல.. விஜய்க்கு பிரேமலதா சப்போர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved