MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அக்டோபர் 27ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! அதிலும் 3 நாள் தொடர்ந்தா.?? துள்ளி குதிக்கும் மாணவர்கள்

அக்டோபர் 27ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! அதிலும் 3 நாள் தொடர்ந்தா.?? துள்ளி குதிக்கும் மாணவர்கள்

அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 11 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Getty

விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் கொத்து கொத்தாக விடுமுறையானது கொட்டி வருகிறது. இதனால் மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் குஷியாக துள்ளி குதித்து வருகின்றனர். அந்த வகையில் அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே ஆயூத பூஜை, காந்தி ஜெயந்தி என விடுமுறை கிடைத்தது. மேலும் காலாண்டு விடுமுறையும் தொடர்ந்து வந்ததால் சுற்றுலாவிற்கு பறந்தனர்.

24
Image Credit : Getty

இந்த நிலையில் அடுத்தாக தீபாவளியையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. அக்டோபர் 18 சனிக்கிழமை, 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி விடுமுறை, அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகைய்யொட்டி பொதுமக்கள் வசதிக்காக தமிழகத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. எனவே இப்போதே சொந்த ஊரில் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.

Related Articles

Related image1
Gold Rate Today அக்டோபர் 11: இல்லத்தரசிகளை பங்கம் செய்யும் தங்கம்.! கவலையில் ஆழ்ந்த சிங்கப்பெண்கள்.!
Related image2
இவ்வளவு கம்மியா வட்டியா.!!! 30 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
34
Image Credit : Asianet News

இதனை தொடர்ந்து அடுத்த கொண்டாட்டமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அக்டோபர் 27 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

44
Image Credit : Google

அதே நேரம் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக ஈடுகட்டும் வகையில் நவம்பர் 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
Gold Rate Today அக்டோபர் 11: இல்லத்தரசிகளை பங்கம் செய்யும் தங்கம்.! கவலையில் ஆழ்ந்த சிங்கப்பெண்கள்.!
Recommended image2
இவ்வளவு கம்மியா வட்டியா.!!! 30 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved