MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இபிஸ் - செங்ஸ் சமாதானம் செய்துவிட்டேன்..! நோபல் பரிசு கொடுங்க.. இணையத்தை கலக்கும் டிரம்ப் மீம்ஸ்

இபிஸ் - செங்ஸ் சமாதானம் செய்துவிட்டேன்..! நோபல் பரிசு கொடுங்க.. இணையத்தை கலக்கும் டிரம்ப் மீம்ஸ்

அஇஅதிமுக.வில் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Velmurugan s
Published : Nov 01 2025, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்
Image Credit : Asianet News

அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அஇஅதிமுக.வில் அவ்வபோது பூகம்பம் வெடித்துக் கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றம், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா வெளியேற்றம், யாரும் எதிர்பாரா வகையில் முல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி என அவ்வபோது கட்சிக்குள் பூகம்பம் வெடித்துக் கொண்டு இருக்கிறது.

24
ஒருங்கிணைப்புக்கு கெடு விதித்த செங்கோட்டையன்
Image Credit : Asianet News

ஒருங்கிணைப்புக்கு கெடு விதித்த செங்கோட்டையன்

இந்த வரிசையில் தற்போது புதிய வெடி வெடித்துள்ளது. கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்லி அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு பணிகளை பொதுச்செயலாளர் 10 தினங்களில் மேற்கொள்ளவில்லை என்றால் நானே அந்த பணிகளை செய்வேன் என்று கூறி அதிரடி காட்டினார். அதிரடிக்கு நான் சலைத்தவன் இல்லை என்று சொல்லும் வகையில் செங்கோட்டையனின் அனைத்து வகையான கட்சிப் பதவிகளையும் பறித்து அதிரடி காட்டினார்.

Related Articles

Related image1
Now Playing
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1, யார் தி.மு.க-வின் B TEAM..? - செங்கோட்டையன் பரபரப்பு
Related image2
கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் செங்கோட்டையன்- பதிலடி கொடுத்த எடப்பாடி
34
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்
Image Credit : Asianet News

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்

இந்நிலையில் அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி நான் ஒருங்கிணைப்பு பணியைத் தொடங்கிவிட்டேன் என்பதை வெளிப்படுத்தினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்திய நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

44
பழனிசாமி, செங்கோட்டையனை சமாதானப்படுத்திய டிரம்ப்..!
Image Credit : Asianet News

பழனிசாமி, செங்கோட்டையனை சமாதானப்படுத்திய டிரம்ப்..!

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையேயான மோதல் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இணையவாசிகள் தங்கள் பாணியில் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரிடையேயான மோதலை நிறுத்தி வைப்பது போல் வெளியான மீம் கவனம் ஈர்த்துள்ளது.

ரெண்டு பேருடைய சண்டைய சமாதானம் செய்ய வந்த டொனால்ட் டிரம்ப்... pic.twitter.com/qo7V1Qrk6m

— K.Jayaprakash (@itskJayaprakash) October 31, 2025

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
டொனால்ட் டிரம்ப்
செங்கோட்டையன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
Now Playing
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1, யார் தி.மு.க-வின் B TEAM..? - செங்கோட்டையன் பரபரப்பு
Recommended image2
கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் செங்கோட்டையன்- பதிலடி கொடுத்த எடப்பாடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved