MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடேங்கப்பா! மகளிர் விடியல் பயண திட்டம்! இதுவரை இத்தனை கோடி பேர் பயணமா?

அடேங்கப்பா! மகளிர் விடியல் பயண திட்டம்! இதுவரை இத்தனை கோடி பேர் பயணமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 04 2025, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Magalir Vidiyal Payanam: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். 

23
மகளிர் விடியல் பயண திட்டம்

மகளிர் விடியல் பயண திட்டம்

கட்டணமின்றி பயணித்தவர்கள் பற்றிய விவரங்கள்

குறிப்பாக மகளிர் விடியல் பயண திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இந்த திட்டம் மூலம் பெண்கள் மாதம்தோறும் ரூ.1000த்திற்கும் மேல் சேமிப்பதாக மாநில திட்டக்குழு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் விடியல் பயண திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பயணித்தவர்கள் பற்றிய விவரங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. 

Related Articles

Related image1
ஜூன் 1ம் தேதி மதுரையில்! அமைச்சர்கள் இனி சென்னையில் இருக்கக்கூடாது! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Related image2
நாளை முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தாலும்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
33
ஒரே நாளில் அதிகபட்சமாக 13.59 லட்சம் பேர் பயணம்

ஒரே நாளில் அதிகபட்சமாக 13.59 லட்சம் பேர் பயணம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்

இதுதொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மகளிர் விடியல் பயணம் திட்டம் அறிமுகத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார்  132.91 கோடி பேர் பயணித்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.65 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயணம் மேற்கொண்ட பயணிகளை விட 23 சதவீதம் அதிகம் ஆகும். மகளிர் விடியல் பயண திட்டம் அறிமுகமானதிலிருந்து இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக  28, 2025 அன்று 13.59 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
திமுக
மு. க. ஸ்டாலின்
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
ஜூன் 1ம் தேதி மதுரையில்! அமைச்சர்கள் இனி சென்னையில் இருக்கக்கூடாது! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Recommended image2
நாளை முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தாலும்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved