MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 2 அல்லது 3 நாட்களில்! வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

அடுத்த 2 அல்லது 3 நாட்களில்! வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 06 2025, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
Image Credit : our own

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

24
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 08 முதல் 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 12ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
இன்னும் 2 நாள் லீவு இருக்கு! குஷியில் பள்ளி கல்லூரி மாணவர்கள்!
Related image2
ரயில் முன் பாய்ந்த ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!
34
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
Image Credit : our own

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் ஜூலை 09 வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று முதல் ஜூலை 09 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மேலும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

44
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image2
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Recommended image3
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Related Stories
Recommended image1
இன்னும் 2 நாள் லீவு இருக்கு! குஷியில் பள்ளி கல்லூரி மாணவர்கள்!
Recommended image2
ரயில் முன் பாய்ந்த ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved