MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆகஸ்ட்டில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்! முழு விவரம்!

ஆகஸ்ட்டில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்! முழு விவரம்!

பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Jul 24 2025, 08:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thoothukudi Has A4 Day Holiday In August
Image Credit : our own

Thoothukudi Has A4 Day Holiday In August

தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26, 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்தத் திருவிழா ஆகஸ்ட் 5, 2025 வரை பத்து நாட்கள் நடைபெறும். ஆகஸ்ட் 5ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும். இதில் தூத்துக்குடி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
Image Credit : our own

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

பனிமய மாதா தேர்த்திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். 

அத்தியாவசியப் பணிகள் மற்றும் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். இந்த விடுமுறைக்கு பதிலாக 9.8.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஆகஸ்டில் கொத்து கொத்தாக வரும் அரசு விடுமுறை.!! துள்ளிக்குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
Related image2
தொடர்ச்சியாக வரும் 2 நாள் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துதுறை
34
ஒரு நாள் லீவு போட்டால் 4 நாள் லீவு கிடைக்கும்
Image Credit : GOOGLE

ஒரு நாள் லீவு போட்டால் 4 நாள் லீவு கிடைக்கும்

ஆகஸ்ட் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. ஆகையால் அதற்கு முந்தைய நாள் 4ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் லீவு போட்டால் 2ம் தேதி சனிக்கிழமை, 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் விடுமுறை அறிவிப்பால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.

44
விருதுநகர் மாவட்டத்திற்கும் 28ம் தேதி விடுமுறை
Image Credit : our own

விருதுநகர் மாவட்டத்திற்கும் 28ம் தேதி விடுமுறை

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகள் விடுமுறை
விடுமுறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
ஆகஸ்டில் கொத்து கொத்தாக வரும் அரசு விடுமுறை.!! துள்ளிக்குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
Recommended image2
தொடர்ச்சியாக வரும் 2 நாள் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துதுறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved