MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிப்ரவரி மாதத்தில் பிச்சு உதறப்போகும் மழை.. வானிலை மையம் முக்கிய அப்டேட்

பிப்ரவரி மாதத்தில் பிச்சு உதறப்போகும் மழை.. வானிலை மையம் முக்கிய அப்டேட்

Rain News: தமிழகத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 01 2026, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சென்னை வானிலை மையம்
Image Credit : our own

சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிபொழிவு மற்றும் ஒரு சில இடங்களில் உறைபனி நிலவி வரும் நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

25
டெல்டா மாவட்டங்களில் மழை
Image Credit : our own

டெல்டா மாவட்டங்களில் மழை

இதன் காரணமாக இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

Related Articles

Related image1
Holiday: பிப்ரவரியில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா.!! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியா.?
Related image2
H.ராஜாவுக்கு பக்கவாதம்! முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்! வெளியான தகவல்
35
 லேசானது முதல் மிதமான மழை
Image Credit : our own

லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

45
 வறண்ட வானிலை நிலவக்கூடும்
Image Credit : x

வறண்ட வானிலை நிலவக்கூடும்

பிப்ரவரி 3

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

பிப்ரவரி 4

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

55
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
Holiday: பிப்ரவரியில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா.!! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியா.?
Recommended image2
H.ராஜாவுக்கு பக்கவாதம்! முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்! வெளியான தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved