MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு! ட்விஸ்ட் வைத்த கலெக்டர்!

விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு! ட்விஸ்ட் வைத்த கலெக்டர்!

 கொடைக்கானலில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 10 2025, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Google

தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

23
Image Credit : Google

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

Related Articles

Related image1
அதிகாலையிலேயே தலைநகரை அலறவிடும் அமலாக்கத்துறை! மருத்துவர் தொழிலதிபர் வீட்டில் சோதனை!
Related image2
போடு தகிட தகிட! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகும் கனமழை!
33
Image Credit : our own

இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நடைபெறுவதால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் அறையை விட்டு வெளியேற முடியாமல், அறைக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
விடுமுறை
பள்ளி மாணவர்
கனமழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
அதிகாலையிலேயே தலைநகரை அலறவிடும் அமலாக்கத்துறை! மருத்துவர் தொழிலதிபர் வீட்டில் சோதனை!
Recommended image2
போடு தகிட தகிட! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகும் கனமழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved