MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 3 மணிநேரம்! தென் மாவட்டங்களில் துவம்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

அடுத்த 3 மணிநேரம்! தென் மாவட்டங்களில் துவம்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 08 2025, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வடகிழக்கு பருவமழை
Image Credit : Google

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது காலையிலும் வெயிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை மற்றும் பனிபொழிவும் இருந்து வருகிறது.

24
கனமழை எச்சரிக்கை
Image Credit : our own

கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
எடப்பாடி பழனிசாமி எப்படிபட்டவர் தெரியுமா? சத்தியபாமா சொன்ன பகீர் தகவல்!
Related image2
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓயாமல் கனமழை ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
34
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது.

44
தேன்மாவட்டங்களில் கனமழை வார்னிங்
Image Credit : our own

தேன்மாவட்டங்களில் கனமழை வார்னிங்

இதனிடையே தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென்காசி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
எடப்பாடி பழனிசாமி எப்படிபட்டவர் தெரியுமா? சத்தியபாமா சொன்ன பகீர் தகவல்!
Recommended image2
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓயாமல் கனமழை ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved