MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நடுக்கத்தில் முதல்வர்! இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது! ஒரே போடு போட்ட H.ராஜா!

நடுக்கத்தில் முதல்வர்! இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது! ஒரே போடு போட்ட H.ராஜா!

திமுக அரசு இந்து மக்களுக்கும், இந்து மடாதிபதிகளுக்கும் எதிராக செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். மதுரை ஆதீனம் மீதான போலீஸ் வழக்கு, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட விஷயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 29 2025, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எச்.ராஜா
Image Credit : our own

எச்.ராஜா

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா: திமுக அரசு இந்து மக்களுக்கும், இந்து மடாதிபதிகளுக்கும் எதிராகவே செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்காத காரணத்தினால் மதுரை ஆதீனத்திற்கு தொடர்ந்து இந்த அரசு மிரட்டல் விடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் மதுரை ஆதீனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகும். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே போலீசார் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? விசாரணை முடிந்த பிறகு ஆதீனம் முழு ஒத்துழைப்பு அளித்தார் என்று கூறி சென்ற போலீஸ் அதிகாரிகள், சென்னை சென்றவுடன் அரசின் நிர்பந்தத்தால் ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

24
நடுக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்
Image Credit : ANI

நடுக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசின் இந்த செயல் ஆதீனங்கள் மீது ஒரு மன ரீதியான தாக்குதலை ஏற்படுத்த நினைக்கிறது. இது வன்மையாக கண்டிக்க தக்க செயல். பாதிரியார் மோகன் லாசரஸ் இந்து கோவில்கள் சாத்தான்களின் கூடாரம் என விமர்சித்தார். அவர் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததா? என கேள்வி எழுப்பினார். முதல்வர் ஸ்டாலின் இந்து விரோத சக்தியாக செயல்படுகிறார். டாஸ்மாக் ஊழல் விவகாரம் அமலாக்கத்துறை பிடியில் உள்ளதால் அதிர்ந்து போய் என்ன செய்வது என தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் நடுக்கத்தில் உள்ளார். அதை மறைப்பதற்காகவே இந்துக்கள் மீதும் இந்து மடாதிபதிகள் மீதும் ஒரு தாக்குதலை நடத்த துவங்கி உள்ளார்.

Related Articles

Related image1
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ்.! எதிர்பாரத அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!
Related image2
ஓபிஎஸ்-ஐ போல் உங்களையும் புறக்கணித்துவிட்டாரா பிரதமர்? ஒரே வரியில் டிடிவி தினகரன் கொடுத்த மாஸ் பதில்!
34
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்த அரசு அனுமதி மறுத்தது
Image Credit : our own

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்த அரசு அனுமதி மறுத்தது

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்த அரசு அனுமதி மறுத்தது. ஐகோர்ட்டில் அனுமதி பெற்ற பிறகும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையும் தாண்டி முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. இதை திமுக அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி அளித்த நீதித்துறை மீது இந்த அரசு கோபத்தில் உள்ளது. அரசின் இச்செயல் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். 2023 ஜனவரியில் ராமஜென்ம பூமி பிரதிஷ்டை நடந்த போது தமிழகத்தில் எந்த கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தக்கூடாது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கக்கூடாது என உத்தரவிட்டது இந்த அரசு. இதற்கு என்ன அர்த்தம். திமுக தலைவர் ஸ்டாலின் உடல் ஆரோக்கியம் குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.

44
முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும்
Image Credit : our own

முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும்

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்தே தவிர அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என முதலில் கேட்டது பாஜதான். இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எச். ராஜா
அரசியல்
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
திமுக
மதுரை ஆதீனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ்.! எதிர்பாரத அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!
Recommended image2
ஓபிஎஸ்-ஐ போல் உங்களையும் புறக்கணித்துவிட்டாரா பிரதமர்? ஒரே வரியில் டிடிவி தினகரன் கொடுத்த மாஸ் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved