MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொஞ்சம் கூட நன்றி இல்லையா ஸ்டாலின்! அரசு ஊழியர்களுக்கு இப்படி செய்யலாமா? சொல்வது யார் தெரியுமா?

கொஞ்சம் கூட நன்றி இல்லையா ஸ்டாலின்! அரசு ஊழியர்களுக்கு இப்படி செய்யலாமா? சொல்வது யார் தெரியுமா?

Old Pension Scheme: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்வதாகக் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 13 2025, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
Image Credit : our own

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்திமுதல்வர் கவனம் ஈர்க்கும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்களை இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

26
பழைய ஓய்வூதியம்
Image Credit : our own

பழைய ஓய்வூதியம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் இன்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Related image1
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
Related image2
மீண்டும் மழை எச்சரிக்கை! அடுத்த 5 நாள் வானிலை ரிப்போர்ட்! டெல்டா வெதர்மேன்!
36
திமுக அரசு
Image Credit : our own

திமுக அரசு

தமிழ்நாட்டில் சபிக்கப்பட்ட சமூகம் என்றால் அது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் என்று கூறும் அளவுக்கு அவர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான துரோகங்களை திமுக அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்கள் சார்பில் முன்வைக்கப்படும் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை ஆகும். இந்தக் கோரிக்கைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருபவை தான். இன்னும் கேட்டால் எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கைகளை திமுகவே வலியுறுத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற திமுக அரசு மறுத்து வருகிறது.

46
பழைய ஓய்வூதியத் திட்டம்
Image Credit : our own

பழைய ஓய்வூதியத் திட்டம்

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் தொடர்பாக 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிய திமுக அரசு, மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.

56
அன்புமணி
Image Credit : our own

அன்புமணி

முனிவர் - விஷப்பாம்பு கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நச்சுப்பாம்பை பார்த்த முனிவர் அந்த பாம்புக்கு மருத்துவம் அளித்து காப்பாற்றினாராம். ஆனால், அந்த பாம்போ, கொஞ்சமும் நன்றி இல்லாமல் அந்த முனிவரையே கொத்தியதாம். அதேபோல் தான் பத்தாண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த திமுகவை அரசு ஊழியர்கள் தான் ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால், அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது.

66
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Image Credit : Asianet News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அதிகமாக தமிழ்நாடு 16% பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக ஒருபுறம் மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னொருபுறம் நிதி நெருக்கடி என்ற பழைய பல்லவியை மீண்டும், மீண்டும் பாடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது ஏன்? இதற்கு பெயர் தானே இரட்டை வேடம்?

அரசு ஊழியர்கள் தான் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு ஆவர். அரசின் நிர்வாக சுமைகளை சுமக்கும் அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் திமுகவை வீட்டுக்கும் அனுப்பும் மக்கள் படையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முன் நின்று வழி நடத்துவார்கள். திமுக அரசு அகற்றப்படுவதை உறுதி செய்வார்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
பழைய ஓய்வூதியத் திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
Recommended image2
மீண்டும் மழை எச்சரிக்கை! அடுத்த 5 நாள் வானிலை ரிப்போர்ட்! டெல்டா வெதர்மேன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved