MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தென்மாவட்ட வாக்குகளை குறிவைக்கும் எடப்பாடி..! முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா.. அமித்ஷாவிடம் கோரிக்கை

தென்மாவட்ட வாக்குகளை குறிவைக்கும் எடப்பாடி..! முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா.. அமித்ஷாவிடம் கோரிக்கை

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Sep 17 2025, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டெல்லியில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி
Image Credit : Asianet News

டெல்லியில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக.வில் இருந்து டெல்லி செல்லும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ், செங்கோட்டையன் என அடுத்தடுத்து பலரும் டெல்லி நோக்கி படை யெடுத்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில் அண்மையில் அணிகள் இணைப்பு என்ற கோரிக்கையை முன்னிருத்தி செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து தனது கோரிக்கையை முன்வைத்ததாக அவரே வெளிப்படையாக தெரிவித்தார்.

23
அமிஷா உடன் சந்திப்பு
Image Credit : X/Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

அமிஷா உடன் சந்திப்பு

அவரைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லியில் முகாம் இட்டுள்ளார். குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, இந்த பணியை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார்.

Related Articles

Related image1
என் பெயரை சொல்லாதீங்க கையெழுத்து போட மாட்டாங்க.. ஈபிஎஸ் முதல்வரான ரகசியத்தை உடைத்த TTV
Related image2
உடன் வந்தவர்களையே நம்பாத எடப்பாடி..? மூத்த நிர்வாகிகள் கெட் அவுட்.. அமித்ஷா.வுடன் தனிமையில் பேச்சு
33
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை
Image Credit : Asianet News

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

உள்துறை அமைச்சா அமித்ஷாவின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக அரசியலில் பல தகவல்கள் பறிமாறப்பட்டன. இந்நிலையில், சந்திப்பு தொடர்பாக பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
என் பெயரை சொல்லாதீங்க கையெழுத்து போட மாட்டாங்க.. ஈபிஎஸ் முதல்வரான ரகசியத்தை உடைத்த TTV
Recommended image2
உடன் வந்தவர்களையே நம்பாத எடப்பாடி..? மூத்த நிர்வாகிகள் கெட் அவுட்.. அமித்ஷா.வுடன் தனிமையில் பேச்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved