MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்

மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் திடீரென ஒழிக ஒழிக என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Dec 08 2025, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முதல்வர் முன்னிலையில் கோஷம் எழுப்பிய எம்எல்ஏ மகன்
Image Credit : Asianet News

முதல்வர் முன்னிலையில் கோஷம் எழுப்பிய எம்எல்ஏ மகன்

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மீண்டும் சென்னை செல்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனும், சட்டக்கல்லூரி மாணவருமான அக்சய் என்பவர் திடீரென ஒழிக ஒழிக என கோஷம் எழுப்பினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் எம்எல்ஏ மகனின் வாயை பொத்திய நிலையில் காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

24
நீதிபதிக்கு எதிராக கோஷம்..
Image Credit : Asianet News

நீதிபதிக்கு எதிராக கோஷம்..

இதனிடையே தனது கோஷம் தொடர்பாக விளக்கம் அளித்த எம்எல்ஏ மகன் அக்சய், “ஒழிக ஒழிக நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன். தமிழக முதல்வர் அளித்த தைரியத்தில் தான் அப்படி சொன்னேன். முதல்வர் ஸ்டாலின் நாட்டின் குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல் தான் இந்த மாநிலத்தையும், இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்றும் குரலாக இருக்கிறது.

Hey, Real estate broker. Take this! https://t.co/TNMBbozD6Hpic.twitter.com/boGiCrqs6C

— Dhivya Marunthiah (@DhivCM) December 7, 2025

பாசிச மற்றும் தனது சொந்த கருத்துகளை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் எழுதியது போல் எனக்கு தோன்றியது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

Related image1
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!
Related image2
தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
34
அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுகவினர்..
Image Credit : Asianet News

அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுகவினர்..

ஆனால் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “பொதுமக்கள் மட்டுமல்ல; திமுக அரசின் கட்டுக்கடங்காத நடத்தைக்கும், நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதற்கும் எதிராக திமுக எம்எல்ஏவின் மகனும் குரல் எழுப்புகிறார். மதுரையில், விளாத்திகுளம் திமுக எம்எல்ஏவின் மகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சிக்கும், திருப்பரங்குன்றம் கோயில் மலையில் விளக்கேற்ற நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததற்கும் எதிராகக் குரல் எழுப்புகிறார்.

Not just the common people; even DMK MLA’s son raises his voice against the DMK Govt’s unruly behaviour and defiance of court orders. 

Today in Madurai, Vilathikulam DMK MLA’s son raises his voice against TN CM Thiru @mkstalin’s authoritarian regime and for not following the… pic.twitter.com/C1G24URUAb

— K.Annamalai (@annamalai_k) December 7, 2025

44
பொதுமக்களின் பொறுமை..
Image Credit : Asianet News

பொதுமக்களின் பொறுமை..

எப்போதும் போல, இந்த அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களைப் போலவே, இந்த இளைஞரும் காவல்துறையினரால் விரைவாகக் கைது செய்யப்பட்டார். திமுகவில் உள்ளவர்களால் கூட இனி அமைதியாக இருக்க முடியாதபோது, ​​பொதுமக்களின் பொறுமை எவ்வளவு ஆழமாக சோதிக்கப்பட்டுள்ளது என்பதைப் இது காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நீதிபதிக்கு எதிராக எம்எல்ஏ மகன் கருத்து தெரிவித்ததை அரசுக்கு எதிரானது போல் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணாமலை பாஜக
மு. க. ஸ்டாலின்
திமுக
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
Recommended image2
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
Recommended image3
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
Related Stories
Recommended image1
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!
Recommended image2
தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved