MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டிசம்பர் 12 முதல் 14 வரை இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். 

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 11 2025, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் பவுர்ணமி, அமாவாசை, சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி வார இறுதி நாட்களை முன்னிட்டு 12 முதல் 14ம் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நாளை, நாளை மறுநாள் மற்றும் டிசம்பர் 14ம் தேதி ஞாயிறுக் கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

25
கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்
Image Credit : our own

கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 320 பேருந்துகளும், நாளை மறுநாள் 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
பொங்கல் பரிசுத்தொகுப்பு.. பொதுமக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!
Related image2
மக்களே ரெடியா! தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!
35
சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்
Image Credit : our own

சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும், நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45
முன்பதிவு
Image Credit : our own

முன்பதிவு

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் நாளை 7,838 பயணிகளும் சனிக்கிழமை 3,573 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,323 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

55
Mobile App மூலம் முன்பதிவு
Image Credit : our own

Mobile App மூலம் முன்பதிவு

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிகள் விடுமுறை
பள்ளி மாணவர்
தமிழ்நாடு
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
பொங்கல் பரிசுத்தொகுப்பு.. பொதுமக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!
Recommended image2
மக்களே ரெடியா! தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved