MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய்யை தொடர்ந்து சிபிஐ வலையில் சிக்கிய தமிழக டிஜிபி.. துருவி துருவி கேட்கப்படும் கேள்விகள்!

விஜய்யை தொடர்ந்து சிபிஐ வலையில் சிக்கிய தமிழக டிஜிபி.. துருவி துருவி கேட்கப்படும் கேள்விகள்!

CBI Grills TN DGP in Karur Stampede Case: கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை தொடர்ந்து தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

1 Min read
Author : Rayar r
Published : Jan 12 2026, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
விஜய்யிடம் சிபிஐ விசாரணை
Image Credit : Asianet News

விஜய்யிடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) தலைநகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருபக்கம் விஜய்யிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், மறுபக்கம் தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரணைக்காக சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்.

23
டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரணைக்காக ஆஜர்
Image Credit : x

டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரணைக்காக ஆஜர்

கரூர் சம்பவம் நடந்தபோது டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தார். மேலும் கரூரில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அப்போது செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்திருந்தார். அந்த வகையில் அவருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர்.

சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி கேள்வி

காவல்துறை சரியாக பாதுகாப்பு வழங்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். தவெக கேட்ட இடத்தை கொடுக்காமல் நெருக்கடியான இடத்தை கொடுத்தனர் என்று காவல்துறை மீது தவெகவினர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Related image1
தவெக தலைவரை ரவுண்ட் கட்டும் சிபிஐ! விஜயிடம் கேட்க உள்ள சில முக்கிய கேள்விகள் இதுதான்?
Related image2
7 மணி நேரம் தாமதமாக வந்தேனா..? சிபிஐ முன்பு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்..
33
விஜய் தாமதமாக வந்தாரா?
Image Credit : Asianet News

விஜய் தாமதமாக வந்தாரா?

மேலும் கரூரில் என்ன நடந்தது? தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தாரா? கரூரில் பிரசாரம் செய்ய தவெக கேட்ட இடத்தை காவல்துறை கொடுக்கவில்லையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் துருவித் துருவி கேட்டு வருகின்றனர். கரூர் சம்பவம் நடந்த வேளையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பின்பு ஆயுதப்படை டிஜிபியாக பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
காவல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Recommended image2
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Recommended image3
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Related Stories
Recommended image1
தவெக தலைவரை ரவுண்ட் கட்டும் சிபிஐ! விஜயிடம் கேட்க உள்ள சில முக்கிய கேள்விகள் இதுதான்?
Recommended image2
7 மணி நேரம் தாமதமாக வந்தேனா..? சிபிஐ முன்பு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved