MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிர்ச்சி..! திடீர் திருப்பம்.. ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

அதிர்ச்சி..! திடீர் திருப்பம்.. ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியின் மரணம் வழக்கில் புதிய திருப்பம். 

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 09 2025, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆம்ஸ்ட்ராங் கொலை
Image Credit : our own

ஆம்ஸ்ட்ராங் கொலை

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்க பழியாக நடந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியானது.

24
சம்போ செந்​தில் எஸ்கேப்
Image Credit : our own

சம்போ செந்​தில் எஸ்கேப்

இந்த சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடி திரு​வேங்​கடம் மட்டும் போலீ​சா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​டார். மேலும் சம்போ செந்​தில் மற்​றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Articles

Related image1
தீபாவளி பலகார விற்பனையாளர்களுக்கு! மீறினால் ரூ. 10 லட்சம் அபராதம் 6 மாதம் சிறை தண்டனை! தமிழக அரசு எச்சரிக்கை!
Related image2
அடுத்த 3 மணி நேரத்துக்குள்! சென்னை டூ தூத்துக்குடி உட்பட 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!
34
சிபிஐ விசாரணை
Image Credit : our own

சிபிஐ விசாரணை

இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​சார் 5000 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை எழும்​பூர் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

44
 ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
Image Credit : our own

ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் இன்று காலை உயிரிழந்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
குற்றம்
கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தீபாவளி பலகார விற்பனையாளர்களுக்கு! மீறினால் ரூ. 10 லட்சம் அபராதம் 6 மாதம் சிறை தண்டனை! தமிழக அரசு எச்சரிக்கை!
Recommended image2
அடுத்த 3 மணி நேரத்துக்குள்! சென்னை டூ தூத்துக்குடி உட்பட 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved