MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆசிரியர்களே ஆகஸ்ட் 3ம் தேதி வரை தான் டைம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர்களே ஆகஸ்ட் 3ம் தேதி வரை தான் டைம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 386 ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது, இதில் ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 22 2025, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
Image Credit : our own

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்பது, ஆசிரியர் தினத்தையொட்டி (செப்டம்பர் 5) சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது ஆகும். இது 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்​கள் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. இந்த விருது பெறு​பவர்​களுக்கு ரூ.10,000 ரொக்​கம், வெள்​ளிப் பதக்​கம் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும்.

24
பள்ளிக்கல்​வித்துறை
Image Credit : our own

பள்ளிக்கல்​வித்துறை

இந்நிலையில் நடப்பாண்டில் மாநில நல்​லாசிரியர் விருதுக்கு தகு​தி​யானவர்​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்ளிக்கல்​வி இயக்​குநர் வெளி​யிட்​டுள்​ளார். நடப்​பாண்டு (2025-26) 342 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்​கள், மாவட்​டத்​துக்கு ஒரு​வர் வீதம் 38 தனி​யார் பள்ளி ஆசிரியர்​கள், ஆங்​கிலோ இந்​திய பள்​ளி​கள், சமூக பாது​காப்​புத்​துறை பள்​ளி​கள், மாற்​றுத்​திற​னாளி ஆசிரியர்​களில் தலா 2 பேர் என மொத்​தம் 386 பேருக்கு விருதுகள் வழங்​கப்பட உள்​ளன. இந்த விருதுக்கு விருப்​ப​முள்ள ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழி​யாக ஆக. 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்​.

Related Articles

Related image1
ஆடி அமாவாசை! பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Related image2
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு! 10 நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி!
34
மாநில தேர்​வுக்​குழு​
Image Credit : our own

மாநில தேர்​வுக்​குழு​

அ​திலிருந்து தகு​தி​யானவர்​களை தேர்வு செய்ய முதன்​மைக் கல்வி அலு​வலர் தலை​மை​யில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்​வுக்​குழு அமைக்​கப்பட வேண்​டும். இதையடுத்து விண்​ணப்​பித்த ஆசிரியர்​கள் மாவட்​டத் தேர்​வுக்​குழு​வின் முன் நேர்​காணலுக்கு வரவழைக்​கப்​பட்டு மதிப்​பீடு செய்​யப்​படு​வர். அதன்​பின் மாவட்ட தேர்​வுக் குழு​வினர் தகு​தி​யான ஆசிரியர்​களின் பட்​டியலை பள்ளிக்​கல்வி இயக்​குநர் தலை​மையி​லான மாநில தேர்​வுக்​குழு​வின் பரிசீலனைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும்.

44
தேசிய விருது பெற்றவர்களின் பெயர்​களை பரிந்​துரைக்க​கூ​டாது
Image Credit : GOOGLE

தேசிய விருது பெற்றவர்களின் பெயர்​களை பரிந்​துரைக்க​கூ​டாது

அவற்றை ஆராய்ந்து மாநில தேர்​வுக்​குழு இறு​திப்​பட்​டியலை தயாரிக்க வேண்​டும். விருதுக்கு விண்​ணப்​பிக்​கும் ஆசிரியர்​கள் குறைந்​தது 5 ஆண்​டு​கள் பணி அனுபவம் பெற்​றிருப்​பதுடன், எவ்​வித குற்​றச்​சாட்​டுக்​கும், ஒழுங்கு நடவடிக்​கைக்​கும் உட்படாதவராக இருக்க வேண்​டும். இதுத​விர அரசி​யல் கட்​சிகளு​டன் தொடர்​புடைய​வர்​கள் மற்​றும் தேசிய விருது பெற்றவர்களின் பெயர்​களை பரிந்​துரைக்க​கூ​டாது. அதே​போல், வகுப்​பறை​யில் கற்​பித்​தல் பணி​யில் ஈடு​படும் ஆசிரியர்​களுக்கு மட்​டுமே விருது வழங்​கப்​படும். அலு​வல் பணி​களை மேற்​கொள்​ளும் ஆசிரியர்​கள் விண்​ணப்​பிக்​கக்​கூ​டாது. பள்ளி மாணவர்​களின் இடைநிற்​றலைக் குறைத்​தல் போன்ற பணி​களில் ஈடு​பாடு கொண்​ட​வ​ராக இருக்க வேண்​டும் என்பன உள்ளிட்ட வழி​காட்​டு​தல்​கள்​ அதில்​ இடம்​ பெற்​றுள்​ளன.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
ஆசிரியர்
தமிழ்நாடு அரசு
பள்ளிக் கல்வித் துறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
ஆடி அமாவாசை! பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு! 10 நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த டிஎன்பிஎஸ்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved