MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தெருக்கு தெரு டாஸ்மாக்.! இளைஞர்களை குடிகாரராக்கும் மதுவுக்கு முடிவு கட்ட சூப்பர் சான்ஸ் மக்களே! அன்புமணி!

தெருக்கு தெரு டாஸ்மாக்.! இளைஞர்களை குடிகாரராக்கும் மதுவுக்கு முடிவு கட்ட சூப்பர் சான்ஸ் மக்களே! அன்புமணி!

TASMAC Shop: அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூடவும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 30 2025, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மதுக்கடைகள்
Image Credit : our own

மதுக்கடைகள்

அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

25
அன்புமணி
Image Credit : our own

அன்புமணி

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related Articles

Related image1
தமிழகத்தில் இந்த இடங்களில் மட்டும் காலை 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு.. அஜித் மாதிரி ஆகிடக்கூடாது.. மதியழகன் மனைவி பகீர்
35
போதை ஒழிப்பு
Image Credit : our own

போதை ஒழிப்பு

தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சினை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.

45
மதுவிலக்கு
Image Credit : our own

மதுவிலக்கு

மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும்.

55
கிராம சபைக் கூட்டம்
Image Credit : Asianet News

கிராம சபைக் கூட்டம்

இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
தமிழகத்தில் இந்த இடங்களில் மட்டும் காலை 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு.. அஜித் மாதிரி ஆகிடக்கூடாது.. மதியழகன் மனைவி பகீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved