- Home
- Tamil Nadu News
- ஜி.கே.மணியையும் பதவியில் இருந்து தூக்கும் அன்புமணி.? ராமதாஸ்க்கு ஷாக் கொடுத்த மகன்
ஜி.கே.மணியையும் பதவியில் இருந்து தூக்கும் அன்புமணி.? ராமதாஸ்க்கு ஷாக் கொடுத்த மகன்
பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. தற்போது ராமதாஸின் முக்கிய ஆதரவாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான ஜிகே மணியை அப்பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாமகவில் தந்தை மகன் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக நிர்வாகிகள் இரண்டு பிரிவாக பிரிந்துள்ளனர். அந்த வகையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்து தான் தான் இனி பாமக தலைவர் என கூறினார். ஆனால் அன்புமணியோ பாமக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லையென தெரிவித்து பதிலடி கொடுத்தார். அடுத்ததாக போட்டி பொதுக்குழு நடத்திய ராமதாஸ், அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் இதனை கண்டுகொள்ளாத அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதாக ராமதாஸ் அறிவித்தார். அதே நேரம் தேர்தல் ஆணையம் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்து ராமதாசுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பாமகவின் அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்ப்பு எம்எல்ஏக்கள் இரண்டு பிரிவாக கலந்து கொள்ள உள்ளனர். ஏற்கனவே பாமக கொறடாவாக உள்ள சேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளை கொறடா பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது பாமகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக உள்ள ஜிகே மணியையும் தலைவர் பதவியில் இருந்து நீக்க காய் நகர்த்தி உள்ளார். அந்த வகையில் அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பாமகவின் சட்டமன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கேமணியை நீக்க வேண்டும் என கடிதம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ராமதாஸுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கி வரும் அன்புமணி, தற்போது பாமகவின் அடையாளமாகவும், முக்கிய நிர்வாகியாகவும் உள்ள ஜிகே மணியின் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இந்த செய்தி ராமதாசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனிடையே அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை இன்று சந்தித்து பாமக கொறடாவாக தற்போது உள்ள எம்எல்ஏ அருளை நீக்கி விட்டு மயிலம் சிவக்குமாரை நியமிக்க கோரி மீண்டும் மனு கொடுத்துள்ளனர்.

