MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக

இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், இது நிதிநிலை அறிக்கை கிடையாது, மாபெரும் காது குத்தும் விழா என பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விமர்சித்துள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 17 2026, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்
Image Credit : Google

தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் தொடக்கத்தில் தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்கால பட்ஜெட்டை மாநில நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

23
மாபெரும் காது குத்தும் விழா
Image Credit : Google

மாபெரும் காது குத்தும் விழா

இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இது ஒரு மாபெரும் காது குத்தும் விழா என விமர்சித்துள்ளது. இதனை குறிப்பிட்டு அழைப்பிதழாகவே அச்சிட்டுள்ள அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் கைகளில் பத்திரிகையுடன் சட்டமன்றத்திற்கு வந்தனர்.

Related Articles

Related image1
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related image2
“இரைக்குது” ஒரு செகண்ட் கேப் விட்டு… திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம்
33
காது குத்துபவர்., தலைமை தாங்குபவர்..
Image Credit : Asianet News

காது குத்துபவர்., தலைமை தாங்குபவர்..

அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மாபெரும் காது குத்தும் விழா.. கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் எனும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

நாள் பிப்ரவரி 17 – 2026. இடம் - தமிழக சட்டமன்றம். நேரம் காலை 10 மணி முதல்.

இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்.

மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார்.

மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

பின் குறிப்பு.. சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என்று பல்வேறு முறைகளில் “மொய்” வைக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு பட்ஜெட்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சட்டமன்றத்தில் காது குத்தும் விழா.. பட்ஜெட்டை கலாய்த்து அதிமுக விடுத்த அழைப்பிதழ்
Recommended image2
ரமலான் நோன்பு.! இஸ்லாமியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு
Recommended image3
பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related Stories
Recommended image1
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image2
“இரைக்குது” ஒரு செகண்ட் கேப் விட்டு… திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved