MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜக உறுப்பினரானார் நடிகை கஸ்தூரி.. திமுகவை ஒரு கை பார்த்து விட முடிவு

பாஜக உறுப்பினரானார் நடிகை கஸ்தூரி.. திமுகவை ஒரு கை பார்த்து விட முடிவு

சினிமா நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். திமுக அரசை விமர்சித்தும், சர்ச்சைக்குரிய கருத்துகளால் வழக்குகளையும் சந்தித்த இவர், இப்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 15 2025, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நடிகை கஸ்தூரி சினிமா டூ அரசியல்
Image Credit : Instagram

நடிகை கஸ்தூரி சினிமா டூ அரசியல்

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கஸ்தூரி, 1991ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த கஸ்தூரிக்கு இந்தியன், செந்தமிழ்ப்பாட்டு, அமைதிப்படை போன்ற படங்கள் பெயர் வாங்கி கொடுத்தது.

 மேலும் முன்னணி நடிகர்களான சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். சில ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தவர் 2010இல் தமிழ்ப்படம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

24
திமுக எதிர்ப்பாளராக கஸ்தூரி
Image Credit : Google

திமுக எதிர்ப்பாளராக கஸ்தூரி

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி எந்த ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இணைக்காமல், சுதந்திரமாக கருத்து தெரிவித்து வந்தார். தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டு சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை எதிர்த்து கேள்வி எழுப்பினார்.

 ஆனால் தன்னை திமுக எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டவர் அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். திமுக அரசை கடுமையாக விமர்சித்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஆணவக் கொலைகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

Related Articles

Related image1
தலைவா பட விஜய் போல காட்சி அளித்த ஸ்டாலின்..! லாங் சாட்டில் செம ஃபிட்
Related image2
4 வருஷம் துணை முதல்வராக இருந்தீங்களே அப்போ இபிஎஸ் ஆளுமை தெரியாதா.? ஓபிஎஸ்யை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
34
பாஜகவில் நடிகை கஸ்தூரி
Image Credit : bjp

பாஜகவில் நடிகை கஸ்தூரி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், அவர் மீது வழக்கு பதியப்பட்டு, ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். 

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி இணைத்துக்கொண்டார். 

44
பாஜகவில் திருநங்கை நமிதா மாரிமுத்து
Image Credit : x/ nainar nagendran

பாஜகவில் திருநங்கை நமிதா மாரிமுத்து

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நடிகை கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா  அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்.

சமூக செயல்பாட்டாளரான  கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழக பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பிஜேபி
அரசியல்
நயினார் நாகேந்திரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended image3
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Related Stories
Recommended image1
தலைவா பட விஜய் போல காட்சி அளித்த ஸ்டாலின்..! லாங் சாட்டில் செம ஃபிட்
Recommended image2
4 வருஷம் துணை முதல்வராக இருந்தீங்களே அப்போ இபிஎஸ் ஆளுமை தெரியாதா.? ஓபிஎஸ்யை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved