MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 5 பொங்கல் சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே சொன்ன காரணம் இதுதான்!

5 பொங்கல் சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே சொன்ன காரணம் இதுதான்!

பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்டு இருந்த 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது. என்னென்ன ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Jan 14 2026, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பொங்கல் பண்டிகை
Image Credit : ANI

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து சென்றனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

23
5 சிறப்பு ரயில்கள் ரத்து
Image Credit : Google

5 சிறப்பு ரயில்கள் ரத்து

இந்த நிலையில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் பொங்கலுக்கு அறிவித்த 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது. அதாவது ஜனவரி 19ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06011) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஜனவரி 21 அன்று மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (வ.எண்: 06053) ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ரயில் டிக்கெட் முன்பதிவில் புது ரூல்ஸ்.. இனி இது கட்டாயம்.. பயணிகளே உஷார்
Related image2
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. நாளை முதல் அமல்!
33
சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில்
Image Credit : Google

சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில்

ஜனவரி 19 அன்று இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (வ.எண்: 06033) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 21 அன்று நள்ளிரவு 12.35 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட வேண்டிய போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வ.எண்: 06024) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் ஜனவரி 21 அன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரயிலும் (வ.எண்: 06023) ரத்து செய்யப்பட்டுள்ளது

பயணிகளிடம் வரவேற்பு இல்லை

மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் தலா 1 முறை மட்டுமே இயக்கப்பட இருந்தன. ஆனால் இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. பயணிகள் இல்லாத ரயிலை இயக்குவது பெரும் நஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால் தெற்கு ரயில்வே இந்த ரயில்களை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தென்னக இரயில்வே
தொடர்வண்டி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
ரயில் டிக்கெட் முன்பதிவில் புது ரூல்ஸ்.. இனி இது கட்டாயம்.. பயணிகளே உஷார்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. நாளை முதல் அமல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved