MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10-ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது! மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

10-ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது! மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாடு 10ஆம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தேர்வுத் துறையின் இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 03 2025, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : Google

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மே 16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று அசத்தி இருந்தனர். இந்நிலையில், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் தங்களது மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள மாணவர்களும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். இந்த கல்வியாண்டு முதல் இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்ட வரப்பட்டுள்ளது.

24
மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள்
Image Credit : Google

மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள்

அதாவது முதலில் விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ 275 தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பில் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாக உள்ளது.

Related Articles

Related image1
சென்னையை குளிர்வித்த மழை! அடுத்த 3 மணிநேரத்தில் எங்கெல்லாம் மழை ஊத்தப்போகுது தெரியுமா?
Related image2
மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! இன்று தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
34
தேர்​வுத் துறை
Image Credit : Google

தேர்​வுத் துறை

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்பில்: தமிழகத்​தில் 10ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடை​பெற்​றது. இந்த தேர்வு எழு​தி​ய​வர்​களில் மறுகூட்​டல், மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​களின் பதிவெண் பட்​டியல் இன்​று (ஜூலை 03) மதி​யம் வெளி​யிடப்​படு​கிறது. அதன்​ விவரங்​களை மாணவர்​கள் தேர்​வுத்​ துறை​யின் www.dge.tn.gov.in எனும் இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

44
பதிவிறக்கம் செய்வது எப்படி?
Image Credit : our own

பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்த பட்​டியலில் இடம்​பெறாதவர்​களின் விடைத்​தாள்​களில் எவ்​வித மாற்​ற​மும் இல்லை என்​பது தெரிவிக்​கப்​படு​கிறது. மறு கூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்​பெண் சான்​றிதழ் வழங்​கப்​படும் தேதி விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளி
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image2
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Recommended image3
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Related Stories
Recommended image1
சென்னையை குளிர்வித்த மழை! அடுத்த 3 மணிநேரத்தில் எங்கெல்லாம் மழை ஊத்தப்போகுது தெரியுமா?
Recommended image2
மக்களே எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! இன்று தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved