MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • டி20: இந்தியாவிடம் தோற்றது கையாளாகத் தனம்..! நக்வி வாயைக் கிழித்த பாக்., ராணுவ தலைவர்..!

டி20: இந்தியாவிடம் தோற்றது கையாளாகத் தனம்..! நக்வி வாயைக் கிழித்த பாக்., ராணுவ தலைவர்..!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுத்தது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தம், ஆக்ரோஷமான பேச்சுக்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளன.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 16 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அசீம் முனீரை கோர்த்து விட்ட நக்வி
Image Credit : x

அசீம் முனீரை கோர்த்து விட்ட நக்வி

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது ராணுவத் தலைவர் அசிம் முனீரை கொந்தளிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மோசமான செயல்பாடு குறித்து பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியை முனீர் கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் ஷாபாஸ் ஷெரீப் அரசில் நக்வி உள்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர் மீதான அதிருப்தி அரசிற்கும், ராணுவத்திற்கும் இடையே பதட்டங்களைத் தூண்டியுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுத்தது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தம், ஆக்ரோஷமான பேச்சுக்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளன. போட்டிக்கு முன் வீராவேசமாக பேசிய நக்வி, தனது பேச்சில் ராணுவத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார்.

24
நக்வி ஆக்ரோஷமான பேச்சு
Image Credit : Getty

நக்வி ஆக்ரோஷமான பேச்சு

இந்தியாவுக்கு எதிரான போட்டி ஐசிசியின் அச்சுறுத்தல்கள், பாகிஸ்தானின் அணுகுமுறை குறித்து கேட்டபோது, ​ ‘‘​தானும், பாகிஸ்தான் அரசாங்கமும், அசிம் முனீரும் யாருக்கும் பயப்படவில்லை’’ என்று நக்வி கூறினார். இப்போது அவரது அந்த ஆக்ரோஷமான வார்த்தைப் பிரயோகங்கள் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. இது முனீரின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

போட்டிக்கு முன்பு பேசியதற்கு மொஹ்சின் நக்வி இராணுவத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தன்னை இழுத்து விட்டதால் அசிம் முனீர் வருத்தமடைந்ததாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நக்வி இந்த விஷயத்தை கிரிக்கெட், நிர்வாகத் துறைகளில் மட்டுமே வைத்திருந்திருக்க வேண்டும் என்று முனீர் கூறுகிறார்.

Related Articles

Related image1
வங்கதேசத்தின் புதிய அமைச்சரவையில் இந்து அமைச்சர்..! யார் இந்த கயேஷ்வர் சந்திர ராய்..?
34
அசிம் முனீர் ஆவேசம்
Image Credit : ANI

அசிம் முனீர் ஆவேசம்

நக்வியின் பேச்சில் ஆசிம் முனீர் ஏற்கனவே அதிருப்தி அடைந்திருந்தார். இந்தியாவுக்கு ஏற்பட்ட கடுமையான தோல்வி நிலைமையை மேலும் அதிகரித்தது. இராணுவத் தலைமை இந்த முடிவை ஒரு சாதாரண விளையாட்டை விட அதிகமாகக் கருதியது. பாகிஸ்தான் ராணுவம் அணி சரியாக தயாராக இல்லை என்றும், பதட்டத்தை அதிகரிக்க தேவையற்ற பேச்சை பயன்படுத்தி விட்டடாகவும் கருதுகிறது.

முனீர் தனது அதிருப்தியை பிரதமரின் இராணுவ செயலாளர் மூலம் ஷாபாஸ் ஷெரீப்பிடம் தெரிவித்ததாக தெரிவிக்கின்றன. நடந்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கையாளாகாத்தனம் என்றும், அதை சிறப்பாக நிர்வகித்து இருக்கலாம் என்றும் முனீர் கூறியுள்ளார்.

44
இந்தியா அபார வெற்றி
Image Credit : X

இந்தியா அபார வெற்றி

நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

TR
Thiraviya raj
டி20 உலகக் கோப்பை
பாகிஸ்தான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"
Recommended image2
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image3
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Related Stories
Recommended image1
வங்கதேசத்தின் புதிய அமைச்சரவையில் இந்து அமைச்சர்..! யார் இந்த கயேஷ்வர் சந்திர ராய்..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved