MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • MS Dhoni: ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் சொன்ன 'தல' தோனி! சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!

MS Dhoni: ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் சொன்ன 'தல' தோனி! சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!

சிஎஸ்கே கேப்டன் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார். அவர் சொன்னது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Aug 03 2025, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
MS Dhoni Update About Retirement
Image Credit : Getty

MS Dhoni Update About Retirement

ஐபிஎல் 2025 தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், 5 கோப்பைகளை கையில் வைத்திருக்கும் சிஎஸ்கே படுமோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் சென்றது. இதேபோல் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. கேப்டன்சியிலும் பல இடங்களில் அவர் சொதப்பினார். 43 வயதான சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

24
சென்னையில் தோனி பேட்டி
Image Credit : Getty

சென்னையில் தோனி பேட்டி

ஐபிஎல் 2025ல் கேப்டன்சியில் தோனி சொதப்பி இருந்தாலும் அடுத்த சீசனில் திறமையான இளம் வீரர்களை வைத்து அவர் கோப்பையை பெற்றுத் தருவார் என ரசிகர்கள் நினைக்கின்றனர். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓய்வுபெறுவது குறித்து தோனி சூசமாக பேசியுள்ளார்.

 சென்னையில் தன்னுடைய ஐபிஎல் எதிர்காலம் குறித்து பேசிய தோனி, ''அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு எனது கண்கள் நன்றாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உடற்தகுதி எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது'' என்று நகைச்சுவையாக பேசினார்.

Related Articles

Related image1
பிரைவேட் ஜெட், 5 சொகுசு பங்களா! ராஜாவாக வாழும் 'கூல் கேப்டன்'! சொத்து மதிப்பில் அம்பானிக்கு டப் கொடுக்கும் தோனி!
Related image2
காயத்துடன் விளையாடி விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! தோனி சாதனை சமன்!
34
சிஎஸ்கே பலவீனங்களை சரி செய்வோம்
Image Credit : ANI

சிஎஸ்கே பலவீனங்களை சரி செய்வோம்

சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்துப் பேசிய தோனி, "கடந்த இரண்டு சீசன்களில் நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால் ருத்ராஜ் மீண்டும் வரும்போது எங்களின் பேட்டிங் வரிசை ஒழுங்கமைக்கப்படும். ஐபிஎல் ஏலத்தில் அணியின் பலவீனங்களைச் சரிசெய்ய முயற்சிப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

இப்போது ஏதும் முடிவு செய்ய முடியாது

அண்மையில் பேசிய தோனி, ''ரசிகர்களிடம் எனக்குக் கிடைத்த அன்பும் பாசமும், மறந்துவிடக் கூடாது. எனக்கு 43 வயது. நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இது எனது கடைசி ஆண்டு எப்போது என்று அவர்களுக்குத் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன் என்பது ஒரு உண்மை. இந்த ஐபிஎல் முடிந்துவிட்டது.

 பிறகு அடுத்த 6-8 மாதங்களுக்கு என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்பதைப் பார்க்க நான் உழைக்க வேண்டும். ஓய்வுத் திட்டங்கள் குறித்து இப்போது எதுவும் முடிவு செய்ய முடியாது'' என்று கூறியிருந்தார்.

44
சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி
Image Credit : PTI

சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி

அடுத்த ஐபிஎல் சீசனுக்கு 8 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தோனி அடுத்த சீசனுக்கு ஏற்ற வகையில் உடற்தகுதியை சரி செய்து விடுவார். தோனி இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்குவதால் அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சிஎஸ்கே
எம். எஸ். தோனி
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
பிரைவேட் ஜெட், 5 சொகுசு பங்களா! ராஜாவாக வாழும் 'கூல் கேப்டன்'! சொத்து மதிப்பில் அம்பானிக்கு டப் கொடுக்கும் தோனி!
Recommended image2
காயத்துடன் விளையாடி விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! தோனி சாதனை சமன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved