- Home
- Sports
- Sports Cricket
- பிரைவேட் ஜெட், 5 சொகுசு பங்களா! ராஜாவாக வாழும் 'கூல் கேப்டன்'! சொத்து மதிப்பில் அம்பானிக்கு டப் கொடுக்கும் தோனி!
பிரைவேட் ஜெட், 5 சொகுசு பங்களா! ராஜாவாக வாழும் 'கூல் கேப்டன்'! சொத்து மதிப்பில் அம்பானிக்கு டப் கொடுக்கும் தோனி!
உலகின் நம்பர் 1 கேப்டனாக வலம் வந்த தோனி இன்று பிறந்தாள் கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.

MS Dhoni Net Worth and Income
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். 'கூல் கேப்டன்' என்று அழைக்கப்படும் தோனி தனது அபாரமான தலைமை பண்பால் இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு சென்றவர். இந்திய அணிக்காக 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் இவர் தான்.
தோனி சொத்து மதிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு சென்ற தோனி, ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு ஐந்து ஐபிஎல் பட்டங்களையும், இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்று கொடுத்து உலகின் நம்பர் 1 கேப்டனாக வலம் வரும் தோனி வருமானம் ஈட்டுவதிலும் நம்பர் 1 ஆக திகழ்கிறார். தோனியின் சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம். தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,000 கோடியாக இருக்கும் என்று பல்வேறு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தோனியின் மாத வருமானம் என்ன?
தோனியின் ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது மாத வருமானம் சுமார் ரூ.4 கோடியாக உள்ளது. 18 ஐபிஎல் சீசன்களில் இருந்து தோனி ரூ.204.4 கோடிக்கு மேல் சம்பாதித்தார். 2018 மற்றும் 2021 க்கு இடையில் அவரது சம்பளம் ரூ.15 கோடியாக உயர்ந்தது. 2025 ஆம் ஆண்டில், அவர் ஒரு புதிய வீரராக ரூ.4 கோடிக்கு CSK ஆல் தக்கவைக்கப்பட்டார்.
பல நூறு கோடிகள் மதிப்பில் சொகுசு வீடுகள்
தோனிக்கு ராஞ்சி, டேராடூன், புனே மற்றும் மும்பையில் பல நூறு கோடிகள் மதிப்பில் சொகுசு வீடுகள் உள்ளன. 2025 ஆம் ஆண்டில் தோனியின் பிராண்ட் மதிப்பு 95.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.804 கோடி) என தகவல்கள் கூறுகின்றன. விளையாட்டு வீரர்களில் தோனி தான் அதிக நிறுவனங்களின் பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்கிறார். முன்னணியில் இருக்கும் சுமார் 72 பிராண்டுகளுக்கு தோனி விளம்பர தூதுவராக உள்ளார்.
அதிக பிராண்ட்களுக்கு விளம்பர தூதர்
இதில் Dream11, GoDaddy, Boost மற்றும் Orient Fans ஆகிய முக்கிய நிறுவனங்களும் அடங்கும். 2025 ஆம் ஆண்டில் மிக பிரபலமான Dream11, Gulf Oil, GoDaddy, Boost, BharatMatrimony RedBus, AMFI, Swaraj Tractors, Emotorad, Orient Fans ஆகிய நிறுவனங்களுக்கு தோனி விளம்பரம் செய்து வருகிறார். தோனி பைக் பிரியர் என்பதை விட பைக் பைத்தியம் என்றே சொல்லலாம். எந்த ஒரு பைக் புதிதாக களமிறங்கினாலும் அது உடனடியாக தோனி வீட்டுக்கு வந்து விடும்.
சொகுசு கார்கள், பைக்குகள்
வின்டேஜ் பைக்குகள் முதல் இப்போதைய புது மாடல்கள் பைக் வரை தோனி வீட்டில் நிற்கின்றன. இதில் கவாசாகி நிஞ்ஜா H2, டுகாட்டி 1098 மற்றும் யமஹா RD350 ஆகியவை தனித்து நிற்கின்றன. பைக்குகளை நிறுத்துவதற்கு தோனி புதிய கேரேஜ் வைத்துள்ளார். இதேபோல் தோனியின் வீட்டில் சொகுசு கார்களும் அணிவகுத்து நிற்கின்றன.
அட! பிரைவேட் ஜெட்டும் இருக்கா?
ஹம்மர் H2 மற்றும் ஃபெராரி உட்பட 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை தோனி வைத்திருக்கிறார். ரோல்ஸ் ராய்ஸ், ஜீப் கிராண்ட் செரோகி மற்றும் ஆடி Q7 ஆகியவையும் உள்லன. 1969 ஃபோர்டு மஸ்டாங் போன்ற அரிய விண்டேஜ் கிளாசிக் கார்களையும் தோனி விரும்பி வாங்கியுள்ளார். இது மட்டுமின்றி தோனி தனியாக பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றும் வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

