- Home
- Sports
- Sports Cricket
- IPL Auction 2026: ஆஸி. ஆல்ரவுண்டரை 25 கோடிக்கு தட்டித்தூக்கிய KKR..! 2 அதிரடி வீரர்கள் ஏலம் போகவில்லை!
IPL Auction 2026: ஆஸி. ஆல்ரவுண்டரை 25 கோடிக்கு தட்டித்தூக்கிய KKR..! 2 அதிரடி வீரர்கள் ஏலம் போகவில்லை!
கேமரூன் கிரீன் மதிப்பு 25 கோடியை தாண்டி சென்ற நிலையில் சிஎஸ்கே பின்வாங்கியது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீனை தட்டித் தூக்கியுள்ளது.

ஐபிஎல் 2026 மினி ஏலம்
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்கு 350 வீரர்கள் களமிறங்குகின்றனர். அனைத்து அணிகளிடமும் மொத்தமாக ரூ.237.55 கோடி உள்ளதால் மினி ஏலம் தொடக்கம் முதலே களைகட்டியது. முதலில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பிரைசர் மெக்கர்க் ஏலத்துக்கு வந்த நிலையில், அவரை ஏலம் எடுக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.
டேலிட் மில்லர், கான்வே ஏலம் போகவில்லை
பின்பு தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு எடுத்தது. பின்பு இந்திய வீரர் பிரிஷாவை யாரும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதேபோல் கடந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவையும் யாரும் சீண்டவில்லை.
இதன்பின்பு அனைவரும் எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பெயர் வாசிக்கப்பட்டது. அவரை 2 கோடிக்கு எடுப்பதாக மும்பை இந்தியன்ஸ் ஆரம்பித்து வைத்தது.
கேமரூன் கிரீனுக்கு எகிறிய மதிப்பு
அதன்பின்பு கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கேமரூன் கிரீனுக்கான ஏலத்தொகையை அதிகரித்து சென்ற இதனால் அவர் மதிப்பு ரூ.5 கோடி, ரூ.10 கோடி என அதிகரித்து சென்றது.
தொடர்ந்து ராஜஸ்தான் பின்வாங்கிய நிலையில், கொல்கத்தா அணியும் சிஎஸ்கேவும் கேமரூன் கிரீனை எடுக்க போட்டி போட்டன. இதனால் அவர் மதிப்பு ரூ.15 கோடி, ரூ.20 கோடியை தாண்டி சென்றது. ஆனால் இரு அணிகளும் விடாமல் தொடர்ந்து தொகையை உயர்த்திக் கொண்டே சென்றன.
ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீனை தட்டித் தூக்கிய கொல்கத்தா
கேமரூன் கிரீன் மதிப்பு 25 கோடியை தாண்டி சென்ற நிலையில் சிஎஸ்கே பின்வாங்கியது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீனை தட்டித் தூக்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் வெளிநாட்டு வீரர் கேமரூர் கிரீன் தான். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீரர் தான். ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்து கீரின் உள்ளார்.

