MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ரவீந்திர ஜடேஜாவிற்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ருதுராஜ்– திரும்ப திரும்ப கேப்டனான தோனி!

ரவீந்திர ஜடேஜாவிற்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ருதுராஜ்– திரும்ப திரும்ப கேப்டனான தோனி!

MS Dhoni Captain For CSK In IPL 2025 Remaining Matches : கடந்த 2022 ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேயின் கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் தோனி கேப்டனானது போன்று மீண்டும் 2025ல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு விலகிய நிலையில் தோனி கேப்டனாக நிய்மிக்கப்பட்டுள்ளார்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Apr 10 2025, 08:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Chennai Super Kings Captain MS Dhoni

Chennai Super Kings Captain MS Dhoni

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் அதிக விமர்சனங்களையும், அதிக எதிர்ப்புகளையும் சந்தித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இந்த தொடரில் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. மேலும், வரிசையாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.

சிஎஸ்கேயில் புதிய திருப்பம்; தோல்வி, காயம் காரணமாக விலகிய ருதுராஜ்; மீண்டும் கேப்டனாகும் தோனி!
 

212
MS Dhoni Become CSK Captain Due to Ruturaj Gaikwad Injured

MS Dhoni Become CSK Captain Due to Ruturaj Gaikwad Injured

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே மோசமான தோல்விய சந்தித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகும் தோனி?
 

312
Ruturaj Gaikwad Ruled Out From IPL 2025

Ruturaj Gaikwad Ruled Out From IPL 2025

இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்தார். இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக எம் எஸ் தோனி (MS Dhoni) கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவே களமிறங்கினார்.

412
IPL 2025 Chennai Super Kings, Ruturaj Gaikwad Injured

IPL 2025 Chennai Super Kings, Ruturaj Gaikwad Injured

அதே போன்று அடுத்தடுத்த டெல்லி கெபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் தான் நாளை 11 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து சிஎஸ்கேயின் (CSK Captain MS Dhoni) கேப்டனாக தோனி செயல்படுவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அறிவித்துள்ளார்.

512
MS Dhoni Captain, CSK Captain MS Dhoni

MS Dhoni Captain, CSK Captain MS Dhoni

காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்

காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக எஞ்சிய 9 போட்டிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்த இருக்கிறார். இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு சம்பவம் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்றது.

612
Ruturaj Gaikwad, IPL 2022, Ravindra Jadeja

Ruturaj Gaikwad, IPL 2022, Ravindra Jadeja

2022 ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் சிஎஸ்கே:

இதே போன்று தான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்றது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

712
IPL 2025, Chennai Super Kings, CSK New Captain

IPL 2025, Chennai Super Kings, CSK New Captain

2022ல் ரவீந்திர ஜடேஜா கேப்டன்

ஐபிஎல் 2022 தொடரில் சிஎஸ்கே வரிசையாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. 5ஆவது போட்டியில் வெற்றி பெற்றது. 6ஆவது போட்டியில் தோல்வி, 7ஆவது போட்டியில் வெற்றி, 8ஆவது தோல்வி, 9ஆவது போட்டியில் வெற்றி, 10ஆவது போட்டியில் தோல்வி, 11ஆவது போட்டியில் வெற்றி, கடைசி 3 போட்டிகளில் தோல்வி என்று மொத்தம் 4 போட்டிகளில் வெற்றி கண்டது.

812
Ruturaj Gaikwad Injured, Ruturaj Gaikwad Ruled Out From IPL 2025

Ruturaj Gaikwad Injured, Ruturaj Gaikwad Ruled Out From IPL 2025

இந்த தொடரில் முதல் 8 போட்டிகளுக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில் மோசமான தோல்வி காரணமாக எஞ்சிய போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக எஞ்சிய 4 போட்டிகளுக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார். இப்போது மீண்டும் இதே போன்ற ஒரு நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

912
Chennai Super Kings Captain MS Dhoni

Chennai Super Kings Captain MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றி என்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது எல்லா போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 10 போட்டிகளில் வெற்றி என்ற கணக்கில் மொத்தமாக 20 புள்ளிகள் கிடைக்கும்.

1012
MS Dhoni Become CSK Captain Due to Ruturaj Gaikwad Injured

MS Dhoni Become CSK Captain Due to Ruturaj Gaikwad Injured

மேலும் மற்ற அணிகள் 10 போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். எஞ்சிய 9 போட்டிகளில் 8 வெற்றி கிடைத்தால் 18 புள்ளிகள் கிடைக்கும்.

7 போட்டிகளில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் கிடைக்கும்.

6 போட்டிகளில் வெற்றி என்றால் 14 புள்ளிகள் கிடைக்கும்.

5 போட்டிகளில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் கிடைக்கும்.

1112
IPL 2025 Points Table, CSK Playoff Chances

IPL 2025 Points Table, CSK Playoff Chances

அதன் பிறகு பிளே ஆஃப் வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்த குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகள் பெற்றிருந்தது. கடந்த சீசனில் கேகேஆர் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

1212
IPL 2025 Playoffs, MS Dhoni Captain

IPL 2025 Playoffs, MS Dhoni Captain

ஆனால், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது என்பது சற்று சவாலான ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணமாக விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே கிடைத்திருக்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஐபிஎல் 2025
இந்தியன் பிரீமியர் லீக்
எம். எஸ். தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ்
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
Recommended image2
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
Recommended image3
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved