MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • ஆன்மிக மாதம் "ஆனி" சிறப்புகள்- திருமஞ்சனம், மாங்கனி திருவிழா,தெப்பத்திருவிழா

ஆன்மிக மாதம் "ஆனி" சிறப்புகள்- திருமஞ்சனம், மாங்கனி திருவிழா,தெப்பத்திருவிழா

ஆனி மாதம் முகூர்த்த நாட்களின் தொடக்கமாகவும், பல முக்கிய விழாக்களைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது. இம்மாதத்தில் கூர்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும், சிவாலயங்களில் நடராஜருக்கு திருமஞ்சனமும், வைணவத் திருத்தலங்களில் ஜேஷ்டாபிஷேகமும் நடைபெறும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 13 2025, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ஆன்மிக மாதம் ஆனி
Image Credit : our own

ஆன்மிக மாதம் ஆனி

வைகாசி மாதத்திற்கு பிறகு வரும் ஆனி மாதம் மிதுன மாதம் என்று அழைக்கப்படுகிறது. முகூர்த்த நாட்கள் தமிழ்மாதப்படி ஆனி மாதத்தில் தொடங்குவதாக கூறப்படுகிறது. ஆனி மாதத்தில் பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன. காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் ஆனி திருமஞ்சனம் எனப்படும் திருவிழா சிவ ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும். நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

28
ஆலயங்களில் ஆன்மிக வழிபாடு
Image Credit : Social Media

ஆலயங்களில் ஆன்மிக வழிபாடு

வைகாசி மாதத்திற்கு பிறகு வரும் ஆனி மாதம் மிதுன மாதம் என்று அழைக்கப்படுகிறது. முகூர்த்த நாட்கள் தமிழ்மாதப்படி ஆனி மாதத்தில் தொடங்குவதாக கூறப்படுகிறது. ஆனி மாதத்தில் பல முக்கிய விஷேச தினங்களும், முகூர்த்த நாட்களும் உள்ளன. காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் ஆனி திருமஞ்சனம் எனப்படும் திருவிழா சிவ ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும். நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

Related Articles

Related image1
கடன், சங்கடங்களை தீர்க்கும் அங்காரக சதுர்த்தி விரதம் – விநாயகர், முருகன் வழிபாடு செய்தால் என்ன பலன்?
Related image2
மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!
38
மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம்
Image Credit : Getty

மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம்

உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி என்கின்றனர் ஆன்மிகவாதிகள். இது தேவர்களின் மாலைப் பொழுது என்கிறது சாஸ்திர நூல்கள். மேலும் ஆனிமாதம் இளவேனிற் காலம் என்றும் கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும் என்பதால் ஆலயம் செல்வதற்கும் இறைவனை பிரார்த்தனை செய்வதற்கும் ஏற்ற மாதம் என்கின்றனர் சிவாச்சாரியார்கள்.ஆனி மாதத்தில் பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் நிகழ்வு ஆனி மாதத்தில் தான் நடத்துள்ளது.

48
நடராஜ பெருமானுக்கு திருமஞ்சனம்
Image Credit : our own

நடராஜ பெருமானுக்கு திருமஞ்சனம்

ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் கோலாகலமாக நடைபெறும். அதேபோல் வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.

58
காரைக்காலில் மாங்கனி திருவிழா
Image Credit : our own

காரைக்காலில் மாங்கனி திருவிழா

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, மாங்கனித் திருவிழா நான்கு நாள்கள் நடைபெறும். ஆனி பௌர்ணமியன்று சுவாமியும் அம்பாளும் வீதிவுலா வரும் போது காரைக்கால் அம்மையார் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அப்போது பக்தர்கள், மாடி வீடுகளில் ஏறி மாடியின் மேல்புறத்தில் நின்று கொண்டு மாம்பழங்களை கூடைகூடையாக சுவாமி ஊர்வலத்தின் மீது அபிஷேகிப்பார்கள். அப்படி மாங்கனி திருவிழாவில் சமர்ப்பிக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

68
 ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம்
Image Credit : google

ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம்

பெரும்பாலான கோயில்களில் ஆனி பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்த வெளி கொண்ட கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன்மீது அபிஷேகிப்பார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பர்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். அந்த மாம்பழங்களை சாப்பிடுவோருக்கு ஆரோக்கியம், புகழ் உள்ளிட்ட 16 செல்வங்களும் முழுமையாக கிடைக்கும்

78
ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா
Image Credit : google

ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி, தெப்பத்திருவிழா நடைபெறும். அந்த வகையில் மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

88
ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் பௌர்ணமி வழிபாடு
Image Credit : google

ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் பௌர்ணமி வழிபாடு

இதேபோன்று திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமி அன்று ஸ்ரீ தாயுமானவ சுவாமிக்கு வாழைப் பழத்தார்கள் சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜைகள் நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார். அதை போட்டி போட்டுக்கொண்டு பக்தர்கள் வாங்கிச்செல்வர். அதேபோல் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையாரையும் தரிசனம் செய்து அருள்பெறலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில் நிகழ்வுகள்
ஜோதிடம்
தமிழ்நாடு
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவிலில் செருப்பு காணாமல் போனால் அதிர்ஷ்டமா? ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended image2
மகா சிவராத்திரி உருவான வரலாறு: ஏன் இந்த இரவு இவ்வளவு புனிதமானது? முழு விபரம்!
Recommended image3
தனுசு ராசியினர் வழிபட வேண்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? என்ன பலன் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
கடன், சங்கடங்களை தீர்க்கும் அங்காரக சதுர்த்தி விரதம் – விநாயகர், முருகன் வழிபாடு செய்தால் என்ன பலன்?
Recommended image2
மகா சிவராத்திரி: மஞ்சள் கடுகு கொண்டு சிவ வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved