MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அட்சய திருதியை நாளில் சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! இனிமே இந்த ராசிகள் வாழ்வில் பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!

அட்சய திருதியை நாளில் சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! இனிமே இந்த ராசிகள் வாழ்வில் பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!

Malavya Rajyoga 2026 Lucky Zodiac Signs : அட்சய திருதியை நாளில் சுக்கிர பகவான் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் குறித்தும், அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 17 2026, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Malavya Rajyoga 2026 Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Malavya Rajyoga 2026 Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தின்படி, சுக்கிர பகவான் செல்வம், பொன், பொருள், காதல், திருமணம், இன்பம் ஆகியவற்றின் காரகராக விளங்கி வருகிறார். 2026 ஏப்ரல் 19 அன்று அட்சய திருதியை அன்று, சுக்கிர பகவான் மேஷ ராசியில் இருந்து தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இவர் இந்த ராசியில் மே 14 ஆம் தேதி வரை பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

28
மாளவ்ய ராஜயோகம்
Image Credit : Asianet News

மாளவ்ய ராஜயோகம்

மாளவ்ய ராஜயோகம் வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான யோகமாக அறியப்படுகிறது. இந்த யோகம் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் தொழில் தொடர்பான முன்னேற்ற வாய்ப்புகள், நிதி சார்ந்த லாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி என பல்வேறு நன்மைகளை வழங்க உள்ளது. மே 14 வரை ரிஷப ராசியில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும், ஆடம்பர வாழ்க்கையையும் அள்ளித் தர இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Related Articles

Related image1
Shatank Yog : அட்சய திருதியை அன்று இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! செவ்வாய்-குரு உருவாக்கும் சதாங்க யோகத்தால் தங்க நகைகள் குவியும்.!
Related image2
சர்வ அமாவாசையான இன்று சனி பெயர்ச்சி.! சித்திரை அமாவாசையில் நடக்கும் அதிசயம்.! கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
38
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர இருக்கிறார். இதன் காரணமாக செல்வ வளம் அபரிமிதமாக அதிகரிக்கும். சொத்து சேர்க்கை நடைபெறும். பொன், பொருள், ஆபரணங்கள் குவியும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான படிகள் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நம்பிக்கையான முடிவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணுவீர்கள்.

48
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியே சுக்கிர பகவான் தான். இந்த பயிற்சி உங்கள் ராசியிலேயே நிகழ இருப்பதால், உங்கள் தொழில் வாழ்க்கை நிலையானதாக மாறும். தடைபட்ட வேலைகள் வேகம் பிடிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய ஆளுமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லிணக்கமும் மேம்படும்.

58
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டும், ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் உள்ள பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

68
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிர பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் இருந்த தகராறுகள் தீர்க்கப்படும். வேலையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வலுப்பெறும். குடும்பத்தினருக்காக பல சிறப்பான வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

78
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிர்ஷ்டத்தை வலுப்படுத்தும். மூன்றாம் வீடான சகோதரர்கள் மற்றும் தைரிய ஸ்தானத்தில் சுக்கிர பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் காண்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீடுகளிலிருந்து திடீர் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் குறைவாகவும் இருக்கும்.

88
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Predictions: 2026-க்குள் இந்த 5 ராசிகள் லைப் டோட்டலாக மாறப்போகுது.. பாபா வாங்காவின் கணிப்பு.!
Recommended image2
அட்சய திருதியை: டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கும் நல்ல நேரம் பார்க்க வேண்டுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?
Recommended image3
Shatank Yog : அட்சய திருதியை அன்று இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! செவ்வாய்-குரு உருவாக்கும் சதாங்க யோகத்தால் தங்க நகைகள் குவியும்.!
Related Stories
Recommended image1
Shatank Yog : அட்சய திருதியை அன்று இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! செவ்வாய்-குரு உருவாக்கும் சதாங்க யோகத்தால் தங்க நகைகள் குவியும்.!
Recommended image2
சர்வ அமாவாசையான இன்று சனி பெயர்ச்சி.! சித்திரை அமாவாசையில் நடக்கும் அதிசயம்.! கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved