- Home
- Politics
- அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி
மக்களவையில் 100 எம்.பி-கள் அல்லது ராஜ்யசபாவில் 50 எம்.பி-கள் கையொப்பம் போட்டால் இம்பீச்மெண்ட் செய்ய உரிமை உள்ளது. குடியரசுத் தலைவர் இம்பீச்மெண்டுக்கு (இழப்பு) உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தியாவில் இதுவரை ஒரு நீதிபதியும் இம்பீச் செய்யப்படவில்லை.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மதுரை பெஞ்ச் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார். அவருக்கு எதிராக திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் ஒரு தர்கா உள்ளது. அங்கு தீபத்தூண் என்ற இடத்தில் கார்த்திகை தீப திருவிழாவின்போது தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ராம ராவிகுமார் மனுதாக்கல் செய்தார்.
டிசம்பர் 1 அன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 10 பேருடன் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் மலை உச்சியேறி தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். இதனை கோயில் நிர்வாகம் தர்கா நிர்வாகம் எதிர்த்தது. நீதிபதி இது சின்ன சடங்கு என்றும், முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை பாதிக்காது என்றும் கூறினார்.
திமுக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், 9 ம்தேதி திமுக தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற 107-120 எம்.பி-கள் மக்களவை ஸ்பீக்கர் ஒம் பிர்லாவிடம் இம்பீச்மெண்ட் நோட்டீஸ் சமர்ப்பித்தனர். இது அரசியல் அமைப்புச் சட்டம் 217 மற்றும் 124 பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.
கனிமொழி, டி.ஆர். பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, ஆ.ராஜா, கலாநிதி மாறன், தொல்.திருமாவளவன், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் கையொப்பமிட்டனர். நீதிபதியின் நடத்தை நீதித்துறையின் தன்னாட்சி, வெளிப்படைத்தன்மை, சமத்துவவாத அமைப்பை சந்தேகத்திற்குரியதாக்கியுள்ளது. மக்களவையில் 100 எம்.பி-கள் அல்லது ராஜ்யசபாவில் 50 எம்.பி-கள் கையொப்பம் போட்டால் இம்பீச்மெண்ட் செய்ய உரிமை உள்ளது. இது இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். 3 பேர் கொண்ட கமிட்டி விசாரிக்கும். குடியரசுத் தலைவர் இம்பீச்மெண்டுக்கு (இழப்பு) உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தியாவில் இதுவரை ஒரு நீதிபதியும் இம்பீச் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து திமுக மீது குற்றம்சாட்டியுள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘‘ஆட்சிக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக இந்து இறையாண்மைக்கு எதிராக கருத்துச் சொல்ல லஞ்ச லாவண்ய வழக்குகள் எதுவுமே இல்லை. நேர்மையாக இருக்கக்கூடிய நீதிபதி, அவரை நாங்கள் நீக்குவோம் என்றால் மற்ற நீதிபதியை பயமுறுத்துகிறார்கள். அதாவது திமுக வழக்குகள் நிறைய இடங்களில் இருக்கிறது. இன்றைக்கு திமுகவினுடைய அமைச்சர்கள், தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் நிறைய இடங்களில் இருக்கிறது. அதை வைத்து திமுகவினர் மிரட்டல் விடுக்கிறார்களா? தமிழகத்தில் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்கிற பெயரை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் Impeachment motion மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மற்ற நீதிபதிகளை திமுகவினர் மிரட்டிப்பார்க்கிறார்களா என்கின்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்.
இதை பத்திரிகை நண்பர்களும் தட்டிக்கேட்க வேண்டும். Impeachment கேட்கிற அளவிற்கு என்ன இருக்கிறது? உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு சென்று இருக்கிறீர்களே.. உச்சநீதிமன்றத்தில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தப்பு செய்திருப்பதாகச் சொன்னார்களா? சொல்லவில்லையே. பிறகு எதற்கு Impeachment motion- போகிறீர்கள்? இண்டி கூட்டணி, திமுகவின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது.
திமுகவின் இந்த Impeachment என்ற அச்சுறுத்தலுக்கு உண்மையான காரணம் திருப்பரங்குன்றம் பிரச்சனை அல்ல உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் திமுக அமைச்சர்களின் மீது சொத்து மற்றும் லஞ்ச வழக்குகளை முடிப்பதற்கு தடையாக உள்ளார்கள். இப்படியே நிலைமையைப் போனால் ஒட்டுமொத்த அமைச்சரவையே இந்த வழக்குகளை சிக்கிக் கொள்ளும் என்று பயந்து தான் உள்நோக்கத்துடன் இப்படிப்பட்ட செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லை. கோர்ட் உத்தரவை மதிக்காத கோட்டு உத்தரவை செயல்படுத்தாத காவல்துறை, அறநிலையத்துறை, வருவாய் துறை அதிகாரிகளை கோர்ட்டின் அவமதிப்பு நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற, விடுவிக்க நீதியரசர் பதவி நீக்க தீர்மானம் என்ற மாறுவேஷம் போடுகிறது தமிழக அரசு’’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
