நாம் செய்திருக்கிற தவறுகளால் இன்றைக்கு திமுக ஆட்சியல் இருக்கிறது. மக்கள் வாக்களித்து திமுக வெற்றி பெறவில்லை. நம்முடைய தவறுக.ள் துரோகிகளின் தவறுகளால் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். நாங்கள் போட்ட பிச்சை.
‘‘நம் எதிரி யார் என்று தெரியும். ஆனால், நம்மோடு உறவாடிக் கெடுக்கிறவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என அதிமுக பொதுக்குழு மேடையில் கோபத்துடன் சீறினார் சி.வி சண்முகம்.
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களை எம்.பி.,யுமான சி.வி.சண்முகம். ‘‘இன்றைக்கு ஆண்டு கொண்டு இருக்கின்ற மக்கள் விரோத அரசு ஸ்டாலின் அரசுக்கு சங்கு ஊதப்படுகிற ஒரு பொதுக்குழு. இந்த ஐந்து ஆண்டு காலத்திலே இந்த அதிமுக இருக்குமா? இருக்காதா? இரண்டாவது போய்விட்டது. மூன்றாக போய்விட்டது. நான்காக போய்விட்டது. அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார். அதனால் இந்த இயக்கம் காணாமல் போய்விடும். வெற்றி பெறாது. வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தினந்தோறும் இந்த ஆளும் திமுக அரசு, ஸ்டாலினுடைய அரசு பல்வேறு பொய்யான கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டு வந்திருக்கிறது.

இன்றைக்கு, நேற்று இல்லை... என்றைக்குமே அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் நம்மை தான் குறி வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த அண்ணா திமுகவை அழித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திலே எதிரி திமுக மட்டும் அல்ல. துரோகி மட்டும் அல்ல. நம்மோடு உறவாடிக் கொண்டிருக்கிறவர்களும் இதில் இருக்கிறார்கள். நம்முடைய எதிரி, நம்முடைய துரோகி கருணாநிதி திமுகதான். ஆனால் நம்மோடு உறவாடி, நம்மை கெடுப்பருடன் தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில அரசியல் புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும் .
பல்வேறு சூழ்ச்சிகள். அப்படி இனம் கொண்ட காரணத்தால் தான் பல்வேறு சூழ்ச்சிகள், பல்வேறு சதி திட்டங்களை தீட்டினாலும் அதிகாரப்பலம், ஆட்சி பலம், பணபலம் இத்தனையையும் மீறி, இத்தனையும் முறியடித்து இந்த கட்சியை நிலை நிறுத்தி அதிமுகவை எவனாலும், எந்த கொம்பனாலும், ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்ற நிலைக்குஎடப்பாடியார் கொண்டு வந்திருக்கிறார். இன்னும் தேர்தலுக்கு 100 நாள் இருக்கிறது. இந்த திமுக ஆட்சிக்கு முடிவுரை, கவுண்டவுன் ஸ்டார்ட் .இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு தேர்தலிலே தேர்தல் கருத்துக்கணிப்புகளை பார்க்கிறோம். எந்த தேர்தல் கருத்துக் கணிப்பாவது உண்மையாக நடந்திருக்கிறதா? என்றைக்காவது அதிமுக வெற்றி பெறும் என்று எந்த தேர்தல் கருத்துக்கணிப்பிலாவது சொல்லப்பட்டிருக்கிறதா? 2011ல் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். 2021-ல் அதிமுக காணாமல் போய்விடும் என்றார்கள். ஆனால் நமக்கும் திமுகவுக்கும் எவ்வளவு வித்தியாசம்? வெறும் 3 லட்சம் வாக்குகள்.

அது நமது துரோகிகள் செய்த தவறு. நாம் செய்திருக்கிற தவறுகளால் இன்றைக்கு திமுக ஆட்சியல் இருக்கிறது. மக்கள் வாக்களித்து திமுக வெற்றி பெறவில்லை. நம்முடைய தவறுக.ள் துரோகிகளின் தவறுகளால் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். நாங்கள் போட்ட பிச்சை. இன்றைக்கு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். எங்கள் கட்சி அண்ணா திமுக தொண்டர்கள் நிறுவிய கட்சி. தொண்டர்களால் தொடங்கப்பட்ட கட்சி. தொண்டர்களால் செயல்படுகிற ஒரு இயக்கம். இது கோபாலபுரத்து குடும்பம் அல்ல. திமுக இல்லை. இது அதிமுக. ஆகவே தயவு செய்து மன உறுதியோடு இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் தைரியமும், உங்கள் மன உறுதி தான் அதிமுக எடப்பாடி 2026 மீண்டும் தமிழகம் முதலமைச்சராக அமர வைக்கும்’’ எனத் தெரிவித்தார்.

