MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • திமுகவுடன் தவெக மா.செ-க்கள் நெருக்கம்..! வீரியத்தை உணர்திய புஸ்ஸி..! ரிப்போர்ட்டால் ஆடிப்போன விஜய்..!

திமுகவுடன் தவெக மா.செ-க்கள் நெருக்கம்..! வீரியத்தை உணர்திய புஸ்ஸி..! ரிப்போர்ட்டால் ஆடிப்போன விஜய்..!

‘ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதல்ல’ என திமுக அமைச்சர் துரைமுருகன் சொன்னதை புரிந்துகொள்வாரா தவெக தலைவர் விஜய்..?

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 28 2025, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

‘‘புஸ்ஸி ஆனந்தை மீறி தவெகவில் எதுவும் செய்ய முடியவில்லை’ என விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோவை அப்போது கண்டுகொள்ளாத விஜய், தற்போது அதன் வீரியத்தை உணர்ந்திருக்கிறார்.

கரூர் சம்பவத்திற்கு பின் ஒரு மாத காலம பனையூர் அலுவலகம், வீடு என்று மட்டுமே இருந்து வந்த விஜய் சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது தவெக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி இருப்பதாக தெரிகிறது. 20 மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமறைவாக இருந்தபோது நடந்த இஅத நிர்வாகிகளுடனான சந்திப்பில் சில அதிர்ச்சியான தகவல்கள் விஜய்க்கு எட்டியிருக்கிறது.

24
Image Credit : Asianet News

பல விஷயங்களை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா தனது கவனத்துக்கே கொண்டுவரவில்லை என்பதை விஜய் உணர்ந்து கொண்டுள்ளார். கரூர் சம்பவத்திற்கு தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களின் அனுபவமில்லாத செயல்பாடுகளும் ஒரு காரணம் என்று விஜய் நம்புகிறார். மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையின் போது கரூர் சம்பவம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. அப்போது சம்பவத்திற்கான காரணத்தையும், தவறுகளையும் ஆராயாமல், ஒவ்வொரு நபரும் மற்றவர்கள் மீது குற்றம்சாட்ட தொடங்கி இருக்கின்றனர்.

Related Articles

Related image1
ரூ 30,00,000 தர்றோம்..! விஜயை சந்திப்பதை தடுக்க பேரம் பேசிய திமுக பிரமுகர்..? பஸ் டிரைவருக்கும் மிரட்டல்..!
34
Image Credit : Asianet News

மாவட்டம், ஒன்றிய அளவில் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகளை அறிய காத்திருந்த விஜய்க்கு, இவர்களின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே தவெக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் தொடர்பாக விஜய்யின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஒரு ரிப்போர்ட்டை தயார் செய்திருக்கிறார்.

அந்த ரிப்போர்ட்டில் 70 மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும், மாவட்டச் செயலாளர்கள் பலரும் திமுகவினருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் சில மாவட்டச் செயலாளர்கள் பணிகளை மேற்கொண்டாலும், அவர்களால் திமுகவுக்கு இணையான செல்வாக்கோ, பண பலமோ இல்லாததையும் குறிப்பிட்டுள்ளனர்.

44
Image Credit : Asianet News

இதனை கவனித்த விஜய், மாவட்டச் செயலாளர்களையும் கண்காணிக்க தனியார் ஏஜென்சியை நாடி இருப்பதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள விஜய்க்கு நம்பகமான ஏஜென்சியிடம் பணியை கொடுத்துள்ளதாகவும், மாவட்டச் செயலாளர்களின் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் ரிப்போர்ட்டாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதல்ல’ என திமுக அமைச்சர் துரைமுருகன் சொன்னதை புரிந்துகொள்வாரா தவெக தலைவர் விஜய்..?

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
Recommended image2
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
Recommended image3
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!
Related Stories
Recommended image1
ரூ 30,00,000 தர்றோம்..! விஜயை சந்திப்பதை தடுக்க பேரம் பேசிய திமுக பிரமுகர்..? பஸ் டிரைவருக்கும் மிரட்டல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved