MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இதுதான் தவெகவின் சின்னம்..! லாக் செய்த விஜய்..! சத்தமே இல்லாமல் சம்பவங்களை நடத்தும் தவெக..!

இதுதான் தவெகவின் சின்னம்..! லாக் செய்த விஜய்..! சத்தமே இல்லாமல் சம்பவங்களை நடத்தும் தவெக..!

கடைசி நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதைவிட, இந்த நவம்பரில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்குற விஜய் தன்னோட பரப்புரையிலும் சின்னத்தை கொண்டு போய் சேர்த்து விடுவார் என்கிறார்கள்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 25 2025, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Instagram

கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக மொத்தமாக முடங்கி போய்விட்டதாக விமர்சிக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் சத்தமே இல்லாமல் அடுத்த கட்ட நடவடிக்கை நோக்கி நகர்ந்து இருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெக கட்சி தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கபடவில்லை என்று சொல்லப்பட்ட செய்தி பெரிய அளவில் பேசுபொருளானது. ஆனால் இதற்கான அடிப்படைக் காரணமே வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இப்படியான சூழலில்தான் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் ஆணையத்தை நாடி இருக்கிறார் விஜய்.

விஜயின் கரூர் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தவெகவை ஒருவிதமாக தேக்க நிலைக்கு கொண்டு போனது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து தன்னுடைய அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய். தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி நெருங்கி வருவதால் புதிதாக களம் காணக்கூடிய விஜய், சின்னத்தை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. சட்டசபை காலம் முடிந்த நிலையில் நாடு முழுக்க சட்டமன்ற தேர்தலை நடத்தி வருகிற தேர்தல் ஆணையம். மாநிலங்களுக்கான கட்சிகளுக்கு புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.

24
Image Credit : social media

அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் வெளியானது. வாக்கு சதவீதம், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அப்படியே இருக்கும்.தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும். இப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகள் விரும்புகிற சின்னமே நிரந்தரமாக வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் தான் திமுகவுக்கு உதயசூரியனும், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னமும் இருக்கிறது.

விசிக, நாதக கட்சிகளும் அங்கீகாரத்தை பெற்று முறையே பானை, விவசாயி சின்னங்களை தக்க வைத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் அல்லது வெற்றியை பதிவு செய்கிற கட்சி தான் அங்கீகரிக்கப்படும்.

Related Articles

Related image1
என்னதான் உங்க பிரச்சினைனு சொல்லுங்க..! இதுக்கு மேல எங்களால முட்டுக்கொடுக்க முடியாது..! விஜய் ரசிகர்கள் கதறல்..!
34
Image Credit : Asianet News

கரூர் சம்பவத்தை காரணம் காட்டி அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் ஒருவர் போட்ட வழக்கில் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் பதில் சொல்லியிருந்தது. இது ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக மாற்றப்பட்டாலும், அடிப்படையில தேர்தலை சந்திக்காத கட்சிக்கு அங்கீகாரம் எப்படி தருவார்கள்? இதைத்தானே தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக தவெக இல்லை என விளக்கினார்கள் விவரம் அறிந்தவர்கள்.பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கேட்டு நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்ப வெளியிட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் 184 சின்னங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் நிலையில் கட்சிகள் தங்களுக்கு தேவையான சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

44
Image Credit : tvk

குறைந்தது ஐந்து முதல் பத்து சின்னங்களை தேர்வு செய்து இந்த விண்ணப்பங்கள் தரப்பட வேண்டும். இப்படியான சூழ்நிலையில்தான் மகளிர் மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய விதமாகவும், எளிதாக மனதில் நிற்கும் விதமாகவும் ஐந்து சின்னங்களில் கப்பல், விசில், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை விஜய் தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவும் ஆயத்தமாகிவிட்டதாக பனையூர் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. கடைசி நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதைவிட, இந்த நவம்பரில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்குற விஜய் தன்னோட பரப்புரையிலும் சின்னத்தை கொண்டு போய் சேர்த்து விடுவார் என்கிறார்கள். கரூர் மக்களோடு சந்திப்பு, கட்சியில் அனைத்து நிலை நிர்வாகிகள் நியமனம், அடுத்த கட்ட பரப்புரை பயணம் என திட்டமிட்டு வருவதாகக் கூறுகிறார்கள் பனையூர் நிர்வாகிகள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!
Recommended image2
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
Recommended image3
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
Related Stories
Recommended image1
என்னதான் உங்க பிரச்சினைனு சொல்லுங்க..! இதுக்கு மேல எங்களால முட்டுக்கொடுக்க முடியாது..! விஜய் ரசிகர்கள் கதறல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved