அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும் அரசியல் முடிவும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை.

பாமக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சேலத்தில் வரும் 29-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ராமதாஸ் தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெற இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில், கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என்று தமிழகம் மற்றும் தேசிய அளவில் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
இந்நிலையில், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் வெளியிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் பொது அறிவிப்பை செய்திதாளில் வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மக்களே... ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நீதியின் முழக்கம் - உண்மை மறைக்க முடியாது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்வி உயர்நீதிமன்றத்தில் W.PIC) No.1311/2025 என்ற வழக்கில், 04.12.2015 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு உண்மையை சட்டத்தின் முன் நிறுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும்.
போலிக்கு சட்டத்தில் இடமில்லை: போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிமை கோரப்பட்ட முயற்சியும். அதனை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் 09.09.2015 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகளும். அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும். சட்ட அதிகாரமற்றவை என்றும் நீதிமன்றம் தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளது.
உண்மை இன்று சட்டமாகியது
இந்தத் தீர்ப்பின் மூலம் மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டபூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றும் அரசியல் இனி இல்லை
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது. மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயல் ஆகும் இதனை மக்கள் அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காகவே, இந்த அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியிடப்படுகிறது.
இது ஒரு கட்சி அல்ல - இது ஒரு தியாக இயக்கம்
1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி மின்சாரம் இவ்வாத காலம் சாலை இல்லாத கிராமங்கள்,மேடு பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராத்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன். 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன். தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள்.
தியாகத்தின் சொத்து விற்பனைக்கு அல்ல
அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல
முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?
எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும் அரசியல் முடிவும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை.
இது எச்சரிக்கை - அலட்சியம் அல்ல
மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.
நீதியை மீறினால் விளைவுகள் கடுமையானவை
மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். என ராமதாஸ் சார்பில் வழக்குரைஞர்கள்
வி.எஸ்.கோபு, எல்.சுரேஷ் குமார், ஜே.கே சுஜாதா, ச.சுரேஷ் குமார் ஆகியோர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். இது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
