- Home
- Politics
- லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பிரச்சனை வந்தால் விஜய் போட்டோ எடுத்து பார்த்தால் போதுமா? ‘நீ நல்ல வேலைக்கு போடா.. நல்ல தொழில் செய்டா..’ இப்படி செல்வதற்கு யாராவது தவெகவில் ஒரு தகுதி உள்ளவர்கள் இருக்கிறார்களா?

‘‘ஒரு மாற்றத்தை தருவோம் என்று சொன்னார் விஜய். ரசிகர் மன்றத்தில் உழைப்பவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்லி பதவி குடுப்போம் என்று சொன்னார்கள். யாருக்காவது பதவி கொடுத்திருக்கிறார்களா?’’ என திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விஜய்க்கு ரசிகர்களாக இருந்தவர்களுக்கு, விஜய்க்கு வெல்விஷ்சராக இருந்தவர்களுக்கு, விஜய்க்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு, விஜய்க்கு பாலாபிஷேகம் செய்தவர்களுக்கு, விஜய்க்காக உழைத்தவர்களுக்குத்தான் இங்கு பதவி வழங்கப்படும் என்று சொன்னார் புஸ்ஸி ஆனந்த். விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் யாராவது ஒருத்தர் தவெகவில் பதவியில் இருக்கிறார்களா? பாருங்க ஒரு பணக்காரன் திடீர்னு ஒரு பணக்காரன் ஆதவ் அர்ஜூனா வந்து விட்டார். அவர் நல்லவர் என்றால் பரவாயில்லை, ஒழுக்கமானவர் என்றால் பரவாயில்லை.
அந்த ஆதவ் அர்ஜுனா யார்? ஒரு லாட்டரி சீட்டு விற்கக்கூடிய மார்ட்டின் மருமகன். மார்ட்டின் ஜெயிலில் இருக்கும் போது அவரது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவர் ஆதவ் அர்ஜூனா. அது எல்லோருக்கும் தெரியும். அவர் தவெகவில் வந்திருக்கிறார். அவர் திமுகவுக்கு போனார். அங்கு பருப்பு வேகவில்லை. அங்கிருந்து விலகி விசிகவுக்கு போனார். இப்படி பல இடங்களுக்கு சென்றவர். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் முதன்மையிடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்து புஸ்ஸி ஆனந்த். அதற்கு அடுத்து நிர்மல் குமார், செங்கோட்டையன்.
செங்கோட்டையன் என்ன தியாகம் பண்ணிவிட்டார் இந்த மக்களுக்காக? விஜய் ரசிகர் மன்றத்துக்காக என்ன உழைப்பை தந்தவர்? நாஞ்சில் சம்பத் ஒரு நாளைக்கு ஒரு கட்சி மாறுபவர். அதாவது ஒரு மாற்றத்தை தருவோம் என்று சொன்னார் விஜய். ரசிகர் மன்றத்தில் உழைப்பவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்லி பதவி குடுப்போம் என்று சொன்னார்கள். யாருக்காவது பதவி கொடுத்திருக்கிறார்களா? அவர்கள் சொன்னது உண்மையா? இல்லையா? ரசிகர்கள் மன்றத்தைச் சார்ந்தவர்களுக்குத்தான் பதவி என்று புஸ்ஸி ஆனந்த் சொன்னாரா? இல்லையா? அதை விடுங்கள். நாளைய தலைமுறையை வழி நடத்துகிற பொறுப்பு எங்களிடம் இருக்கிறது என்று சொல்கிறார்.
இந்த மக்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார்கள்? ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களுக்கு குடும்பங்கள் இருக்கிறது அல்லவா? ‘உன் வேலையும் வேண்டாம். உன்னுடைய போனஸும் வேண்டாம்’ என்று சொல்லி அவருடைய மாநாட்டுக்கு வரவழைத்தார் புஸ்ஸி ஆனந்த். அவர் இளைஞர் சமுதாயத்தை எப்படி சீரழிக்கிறார்? இவர்களை நம்பி எப்படி போவது? ஒரு பிரச்சனை வந்தால் விஜய் போட்டோ எடுத்து பார்த்தால் போதுமா? ‘நீ நல்ல வேலைக்கு போடா.. நல்ல தொழில் செய்டா..’ இப்படி செல்வதற்கு யாராவது தவெகவில் ஒரு தகுதி உள்ளவர்கள் இருக்கிறார்களா? ‘உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும். இந்த சமுதாயத்தில் எதிர்நீச்சல் அடிக்க வேண்டும். உழைக்க வேண்டும்’ என்று ஏதாவது ஒரு இடத்தில் எங்கேயாவது சொல்லி சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா?
‘போட்டோவை எடுத்து பார்த்துக்கொள். வேலையை விட்டு விட்டு வந்து விடு. தலைவர் இருக்கிறார்’ என்கிறார்கள். தலைவர் என்ன செய்து விடுவார் ? இப்படிப்பட்ட இடத்தில் எப்படி இருக்க முடியும்? இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. நான் இந்த சமுதாயத்திற்கு ஒன்று, இரண்டு அல்ல. 30 பள்ளிக்கூடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறேன். எனது சொந்த உழைப்பில் கட்டி கொடுத்திருக்கிறேன். இன்னும் அதை விரிவுபடுத்த வேண்டும். அதற்காகத்தான் நான் இன்னொரு கட்சிக்கு (திமுக) சென்று இருக்கிறேன்.
விஜய் மக்கள் இயக்க கட்டமைப்பை உருவாக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அடுத்தபடியாக இருந்தது நான்தான். நாங்கள் பின்னால் இருந்து வேலை பார்த்தவர்கள். விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டபோது ரெக்கமண்டேசனில் உள்ளே வந்தார் புஸ்ஸி ஆனந்த். ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
