MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!

Summer Flowers: கடவுளுக்குப் பூக்கள்.! வீடு முழுவதும் வாசம்.! கோடையில் பால்கனியில் வளர்க்க ஏதுவான 6 செடிகள்.!

Best Summer Flowering Plants for Balcony : பூக்கள் நம்ம பால்கனிக்கும் தோட்டத்துக்கும் அழகு சேர்ப்பதோடு மட்டுமல்ல, பூஜைக்கும் உதவுகிறது. சில பூக்கள்ல மருத்துவ குணமும் இருக்கு. வீட்டு பால்கனியில தொட்டியில ஈஸியா வளர்க்கும் செடிகள் பற்றி இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 19 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Best Summer Flowering Plants for Balcony
Image Credit : Gemini AI

Best Summer Flowering Plants for Balcony

தினமும் சாமிக்கு காசு கொடுத்து பூ வாங்குறோம். ஆனா, நம்ம பால்கனியிலேயே சில பூச்செடிகளை வளர்த்தா, பிரெஷ்ஷான பூக்களை சாமிக்கு போடலாம். அந்த வாசனையும் வீடு முழுக்க நிறைஞ்சிருக்கும். அப்படி தொட்டியில வளர்க்கக்கூடிய 6 பூச்செடிகளைப் பத்தி பார்க்கலாம்.

27
செம்பருத்தி
Image Credit : chatgpt.com

செம்பருத்தி

செம்பருத்தியை தொட்டியில வச்சா வருஷம் முழுக்க பூ கிடைக்கும். துர்கை, காளி அம்மனுக்கு இந்த பூவை வெச்சு பூஜை செய்வாங்க. இதுல முடி, சருமத்துக்கு நல்லது செய்யுற மருத்துவ குணமும் இருக்கு. செம்பருத்திக்கு நல்ல வெயில் தேவை. இது எல்லா சீசன்லயும் பூக்கும். சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளைன்னு பல நிறங்கள்ல இது கிடைக்குது.

Related Articles

Related image1
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Related image2
Balcony Gardening : பால்கனி சும்மா இருக்கா? இந்த 9 செடிகளை ட்ரை பண்ணுங்க, சம்மர் முழுக்க பிரெஷா காய்கறி கிடைக்கும்.!
37
மல்லிகை
Image Credit : chatgpt

மல்லிகை

பால்கனியில மல்லிகை செடி வச்சீங்கன்னா, அதோட வாசனை வீடு முழுக்க பரவும். வெள்ளை நிறத்துல பூக்குற இந்த செடியை தொங்கு தொட்டியில கூட வளர்க்கலாம். இது கோடைக்காலத்துல பூக்கக்கூடிய செடி. மேலும் விசேஷ நாட்களல்ல அதிக காசு கொடுத்து பூ வாங்க வேண்டிய அவசியம் இல்ல. வீட்டுல நடக்குற சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த பூவையே பயன்படுத்திக்கலாம்.

47
ரோஜா செடி
Image Credit : Instagram

ரோஜா செடி

ரோஜா செடி யாருக்குத்தான் பிடிக்காது? இதை பூக்களின் ராஜானு சொல்வாங்க. இதுல பல வகைகள் இருந்தாலும், சிவப்பு ரோஜாதான் வீடுகள்ல அதிகம் வளர்க்கப்படுது. சரஸ்வதி தேவிக்கு ரோஜா பூ ரொம்ப பிடிக்கும். இந்த செடியும் வருஷம் முழுக்க பூக்கும். இதுக்கு நல்ல வெளிச்சம் தேவை. 15 நாளைக்கு ஒருமுறை உரம் போடுங்க. கோடையில காலையிலயும் சாயங்காலமும் கண்டிப்பா தண்ணி ஊத்துங்க.

57
சங்குப்பூ
Image Credit : Istock

சங்குப்பூ

சங்குப்பூ செடியில நீல நிறத்துல பூ பூக்கும். இது ஒரு கொடி வகை. அதனால, ஒரு கயிறு கட்டி மேல ஏத்தி விடலாம். தொட்டியில இதை சுலபமா வளர்க்கலாம். விஷ்ணு பகவானுக்கு சங்குப்பூ ரொம்ப பிடிக்கும். இந்த பூவுல மருத்துவ குணமும் இருக்கு. இதை வெச்சு டீ செஞ்சு குடிச்சா, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சர்க்கரை அளவு குறையும். சருமம் பளபளன்னு மின்னும். இறைவனுக்குச் சாற்ற மிகவும் உகந்த மலர் இது.

67
பிரம்ம கமலம்
Image Credit : AI Generated

பிரம்ம கமலம்

பிரம்ம கமலம்னு சொல்லப்படுற இந்த கிருஷ்ணகமல் பூ நீலம், ஊதா, வெள்ளை, மெஜந்தா நிறங்கள்ல பூக்கும். இது பார்க்குறதுக்கு கிருஷ்ணரோட நீல நிறம் மாதிரி இருக்கிறதால, இதை கிருஷ்ணகமல்னு சொல்றாங்க. இதோட வித்தியாசமான தோற்றம் பட்டாம்பூச்சிகளை ரொம்ப ஈர்க்கும். இந்த கொடியில பூக்கும் பூவுல கீழ இதழ்களும், அதுக்கு மேல மெல்லிய இழைகளும், 2-3 ஷேடுல வட்டங்களும் இருக்கும்.

77
இரங்கூன் மல்லி
Image Credit : stockPhoto

இரங்கூன் மல்லி

நல்ல வாசனை உள்ள இரங்கூன் மல்லி கொடியில கொத்து கொத்தா பூக்கள் பூக்கும். இந்த பூக்கள் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்கள்ல அழகா இருக்கும். இதோட வாசனை ஆளையே மயக்குற விதத்தில் இருக்கும். இந்த கொடியோட இலைகள் பச்சை நிறத்துல இருக்கும். இது ஒரு கொடி வகை செடி. இதன் பூக்கள் மாலையில் பூக்கத் தொடங்கி அதிகாலையில் நறுமணத்தை வாரி வழங்கும். பால்கனி கிரில்களில் படரவிட இது சிறந்தது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Miss India 2026: வெறும் 3 மாத பயிற்சி... உலக அழகி போட்டிக்கு தகுதி.. யார் இந்த சாத்வி செய்ல்? மிஸ் இந்தியா சீக்ரெட் கதை!
Recommended image2
எச்சரிக்கை..! உங்கள் மெத்தைக்கு ‘எக்ஸ்பயரி டேட்’ முடிந்துவிட்டதா..? செக் பண்ணுங்க..!
Recommended image3
ஏசி, ஏர் கூலர் எதுவுமே வேணாம்.! பழைய காட்டன் புடவைகளை வைத்து வீட்டை குளுகுளுன்னு மாத்தலாம்.! இப்படி பண்ணா கோடையில் கரண்ட் பில்லே வராது.!
Related Stories
Recommended image1
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Recommended image2
Balcony Gardening : பால்கனி சும்மா இருக்கா? இந்த 9 செடிகளை ட்ரை பண்ணுங்க, சம்மர் முழுக்க பிரெஷா காய்கறி கிடைக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved