- Home
- Lifestyle
- Bra for Sagging Breasts : பெண்களே! தொய்வான மார்பகங்களுக்கு கரெக்டான 'பிரா' இதுதான்... நோட் பண்ணிக்கோங்க
Bra for Sagging Breasts : பெண்களே! தொய்வான மார்பகங்களுக்கு கரெக்டான 'பிரா' இதுதான்... நோட் பண்ணிக்கோங்க
தொங்கும் மார்பகங்களுக்கு சரியான பிரா எது என்று இந்த பதிவில் காணலாம்.

Bra for Sagging Breasts
உடல் எடை அதிகமானாலோ, குழந்தை பெற்றாலோ பெண்களின் மார்பகங்கள் தொய்வடைவது இயல்பான விஷயம். ஆனாலும், உங்களது தோற்றத்தை அழகாக காட்ட விரும்பினால் சரியான பிராவை தேர்வு செய்வது மிகவும் அவசியம். இது தோற்றத்தை அழகாக காட்டுவது மட்டுமல்லாமல் உங்களுக்கு நம்பிக்கையும் கொடுக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை கொண்டிருப்பவர்களுக்கு எந்த பிரா சரியானது என்று இந்த பதிவில் காணலாம்.
மார்பகத்தை முழுமையாக மறைக்கும் பிரா!
தொங்கும் மார்பகங்களை கொண்டிருப்பவர்களுக்கு இந்த பிரா சிறந்த தேர்வு. இந்த பிரா மார்பகங்கள் வெளியே வராமல் தடுக்கும் மற்றும் அவற்றிற்கு தேவையான ஆதரவை வழங்கும். குறிப்பாக மார்பகத்தை தூக்கி அழகாக காட்டும். அதுமட்டுமின்றி, நாள் முழுவதும் வசதியாக உணர வைக்கிறது.
கப் வைத்த பிரா :
தொங்கும் மார்பகங்களுக்கு ஃபுல் கப் வைத்த பிரா ரொம்ப நல்லது. இது மார்பகங்களை முழுமையாக மறைப்பது மட்டுமல்லாமல், மார்பகங்களுக்கு வலுவான ஆதரவை வழங்கும் மற்றும் நல்ல வடிவத்தை கொடுக்கும்.
ஸ்போர்ட்ஸ் பிரா :
கனமான மற்றும் தொங்கும் மார்பகங்களுக்கு இந்த பிரா ரொம்பவே நல்லது என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பிரா மார்பகத்தை இறுக்கமாக வைத்து அவற்றிற்கு சரியான வடிவத்தை கொடுக்கும். எனவே, கனமான மற்றும் தொங்கும் மார்பகங்களை கொண்டவர்கள் இந்த பிராவை தேர்வு செய்யுங்கள்.
புஷ் அப் பிரா :
தொங்கும் மார்பகங்களை கொண்டவர்கள் புஷ் அப் பிரா தேர்வு செய்யலாம். இந்த பிரா மார்பகத்தின் வடிவத்தை சரியாக காட்டும். மேலும் வசதியாகவும் இருக்கும். இதில் இருக்கும் padded cups மார்பகத்திற்கு இயற்கையான வடிவத்தை கொடுக்கும். குறிப்பாக பெரிய மார்பகங்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும்.
T-shirt Bra :
இது மென்மையான பிரா. எல்லா விதமான ஆடைகளுக்கும் இந்த பிரா பொருந்தும். இந்த பிராவில் அகலமான மற்றும் உறுதியான பட்டை இருப்பதால் நாள் முழுவதும் வசதியாக உணர்வீர்கள்.
Minimizer Bra :
மார்பகத்தின் அழகான தோற்றத்திற்கு இது சிறந்த தேர்வு. மார்பகத்தை சிறியதாக காட்டும். எந்த ஆடைகளுக்கும் இது பொருந்தும் குறிப்பாக இறுக்கமான ஆடைகளை அணியும் போது மார்பகத்தை அழகாக காட்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

