- Home
- உடல்நலம்
- Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு
தினமும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை 5 நிமிடங்கள் நடந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Walking Benefits
தினமும் காலை எழுந்ததும் ஒரு மணி நேரமாவது நடைபயிற்சி செல்வது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறையால் நடைபயிற்சி செய்வதற்கு கூட நேரமில்லை. அதுமட்டுமல்லாமல் அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறோம். ஆனால் இப்படி இருப்பது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கப்படும். இதற்கு நீங்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சுமார் 5 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் உங்களது உடலில் பெரிய மாற்றத்தை காண்பீர்கள். அது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
தொப்பை வராமல் இருக்க..
நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு தொப்பை விழும், உடல் பருமன் அதிகரிக்கும். இதற்கு காரணம் உடலில் மெட்டாபாலிசம் ரொம்பவே கம்மியாக இருப்பது தான். மெட்டபாலிசத்தை தூண்ட உடல் செயல்பாடுகள் ரொம்பவே முக்கியம். இதற்கு நீங்கள் தினமும் இரண்டு வேளையும் உடற்பயிற்சி செய்தாலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு பிறகும் கண்டிப்பாக 5 நிமிடங்கள் நடக்கவும். அதுபோல மதிய உணவுக்கு பிறகு உடனே சீட்டில் உட்கார்ந்து வேலை பார்க்காமல் ஒரு குட்டி நடைபயிற்சி செய்யுங்கள். உடலில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
இரத்த ஓட்டம் மேம்படும் :
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தால் கால் கால் முட்டிக்கு கீழ் இரத்த குவிந்துவிடும். மேலும் இரத்த ஓட்டமும் மெதுவாகும். இதை தவிர்க்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சுமார் 5 நிமிடங்கள் நடக்கவும். இதனால் இரத்த ஓட்டம் சீராக நடக்கும். மேலும் இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.
ஆற்றல் கிடைக்கும் :
மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தால் உடல் சோர்வாக இருக்கும். ஒரு கட்டத்திற்கு பிறகு வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். இதற்கு முக்கிய காரணம் உடலில் போதுமான அளவு ஆற்றல் இல்லாததுதான். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சுமார் 5 நிமிடங்கள் நடந்தால் ஒட்டுமொத்த உடலும் இயங்கப்படும். இதனால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு :
நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கும். எனவே ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் நடந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல சர்க்கரை நோய் வருவதையும் தடுக்க உதவியாக இருக்கும்.
இப்படி நடப்பதற்கு என உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அவ்வப்போது எழுந்து தண்ணீர் குடிக்க செல்லவும், பாத்ரூம் செல்லவும். இதுதவிர அலாரம் வைத்துக் கூட வாக்கிங் செல்லுங்கள். இப்படி நீங்கள் தினமும் செய்து வந்தால் உங்களது ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

