2026 விடுமுறை லிஸ்ட் ரெடி! 2026-ல் எந்த நாள் விடுமுறை? முழு பட்டியல் இதோ!
தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டிற்கான 24 பொது விடுமுறை நாட்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறைப் பட்டியல் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

2026 விடுமுறை காலண்டர்
தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அரசு விடுமுறை காலண்டரை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியல் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலை, பயணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை முன்கூட்டியே திட்டமிட உதவும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எந்த அலுவலகங்களுக்கு விடுமுறை?
இந்த அரசு விடுமுறைகள் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை அலுவலகங்கள் என அனைத்துக்கும் பொருந்தும். மேலும், ஒவ்வொரு மாதத்திலும் வரும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் மூடப்பட்டிருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ல் மொத்த விடுமுறைகள்
2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியலில் மொத்தம் 24 அரசு விடுமுறைகள் இடம்பெற்றுள்ளன. இதில் தேசிய விடுமுறைகள், மத மற்றும் பண்பாட்டு பண்டிகைகள், சமூகத் தலைவர்கள் பிறந்த நாள் நினைவு தினங்கள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய நாட்கள் இதில் அடங்கும்.
2026 தமிழ்நாடு அரசு விடுமுறைகள்
ஜனவரி 1 – புத்தாண்டு
ஜனவரி 15 – பொங்கல்
ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 – உழவர் திருநாள்
ஜனவரி 26 – குடியரசு தினம்
பிப்ரவரி 1 – தைப்பூசம்
மார்ச் 19 – தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 21 – ரம்ஜான் ஈத்
மார்ச் 31 – மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 1 – ஆண்டு கணக்கு முடிப்பு நாள்
ஏப்ரல் 3 – குட் ஃபிரைடே
ஏப்ரல் 14 – தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்
மே 1 – மே தினம்
மே 28 – பக்ரீத்
ஜூன் 26 – முஹர்ரம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26 – மிலாத் உன் நபி
செப்டம்பர் 4 – கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 14 – விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 19 – ஆயுத பூஜை
அக்டோபர் 20 – விஜயதசமி
நவம்பர் 8 - தீபாவளி
டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்.
தமிழ்நாடு விடுமுறை லிஸ்ட்
2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி விடுமுறை இன்னும் வெளியிடப்படவில்லை. கல்வித்துறை தனியாக விரைவில் பள்ளிகளுக்கான விடுமுறை காலண்டரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த அரசு விடுமுறை பொதுவான தகவலாக மட்டுமே இருக்கும்.

