MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • கடவுளே.. காதல் திருமணம் செய்த பத்மாவிற்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.! கலங்க வைக்கும் பரபரப்பு கடிதம்!

கடவுளே.. காதல் திருமணம் செய்த பத்மாவிற்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.! கலங்க வைக்கும் பரபரப்பு கடிதம்!

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண், கணவரின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட கடன் தொல்லையால் மனமுடைந்து இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 09 2026, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்
Image Credit : stockPhoto

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர். ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் கல்லூரி படிக்கும் போது பத்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பத்மா வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெற்றோர் எதிர்ப்பை மீறி 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5) இரண்டு மகள்கள் உள்ளனர்.

25
கணவன் மனைவிக்கு இடையே தகராறு
Image Credit : Google

கணவன் மனைவிக்கு இடையே தகராறு

இந்நிலையில் சிவசங்கர் திருமணமானதில் இருந்து சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களின் கடன் வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் குடும்ப செலவுக்கு கூட கணவர் பணம் தராததால் பத்மா இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Related Articles

Related image1
திருமணத்திற்காக பணம் மட்டுமல்ல.. நகையை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு..! விண்ணப்பிப்பது எப்படி.?
Related image2
வீட்டுக்கே வரவழைத்து கட்டிலில் சுபிதா! பார்க்க கூடாததை பார்த்த சித்தப்பா.. இறுதியில் அலறி கூச்சல்! நடந்தது என்ன?
35
குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை
Image Credit : Asianet News

குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை

இதனிடையே பத்மா, மகளிர் குழுவில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் மற்ற குழு உறுப்பினர்கள் அவரை அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா நேற்று முன்தினம் மாலை தனது இரண்டு மகள்களை தூக்குப்போட்டு கொலை செய்து விட்டு தானும் தூக்கில் தற்கொலை செய்து கொண்டார். வேலையில் சென்ற கணவர் சிவசங்கர் வீட்டுக்கு வந்து பார்த்த போது குழந்தைகள் மற்றும் மனைவி தூக்கிட்டு தொங்கியதை பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளார்.

45
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பத்மா தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எனது நிலை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு பாடம்.

55
பத்மா பரபரப்பு கடிதம்
Image Credit : Asianet News

பத்மா பரபரப்பு கடிதம்

எனது கணவரை காதலித்து திருமணம் செய்த பாவத்திற்காக, நான் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறேன். என் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக, என் குழந்தைகளும் அதே கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இதனால் நாங்கள் விடைபெறுகிறோம். நீ எப்படியும் மறுபடியும் வேறு கல்யாணம் செய்வாய். இந்த முறையாவது, நீ வாழ்க்கையில செட்டிலாயிட்ட பிறகு அதைச்செய். என்னைப்போல இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நாசமாக்காதே. இன்னொரு ஜென்மத்திலாவது, என் பெற்றோர் பார்க்கும் உறவுடன் என் குடும்பத்தோட வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
கணவன்
மனைவி
காவல்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்! நாளை முதல் சுங்க கட்டணம் அதிரடி குறைப்பு.. எந்தெந்த சாலைகள் தெரியுமா..?
Recommended image2
இந்தியா ஒரு மத நாடாக மாறும்... இஸ்லாமியர்களுக்கு விசுவாச சான்றிதழ் தேவையில்லை.. ஓவைசி சரவெடி..!
Recommended image3
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
Related Stories
Recommended image1
திருமணத்திற்காக பணம் மட்டுமல்ல.. நகையை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு..! விண்ணப்பிப்பது எப்படி.?
Recommended image2
வீட்டுக்கே வரவழைத்து கட்டிலில் சுபிதா! பார்க்க கூடாததை பார்த்த சித்தப்பா.. இறுதியில் அலறி கூச்சல்! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved