“கமல்ஹாசன் எனும் நான்” மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல்ஹாசன்
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமா கமல்ஹாசன் இன்று மாநிலங்ளவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக கமல்ஹாசன்
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கான 6 உறுப்பினர்களுக்கான பதவி காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறு்பிபனர்களின் அடிப்படையில் திமுக சார்பில் 4 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 2 உறுப்பினர்களும் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழில் உறுதிமொழி ஏற்பு
திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் உள்ளிட்டோரும், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழில் பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன், “மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும்,
பொறுப்பை நேர்மையாக செய்து முடிப்பேன்!
இந்தியாவின் இறையான்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்க இருக்கும் பொறுப்பினை நேர்மையாக செய்து முடிப்பேன் என்றும் உறுதி மொழிகிறேன் என்று கூறி பொறுப்பேற்றுக் கொண்டார்.

