MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • 4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!

சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இரண்டு ஐடி ஊழியர்களான நண்பர்கள், பீர் குடிக்கும் போட்டியில் ஈடுபட்டனர். அதிகப்படியாக பீர் குடித்ததால் இருவரும் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 21 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐடி ஊழியர்கள்
Image Credit : Asianet News

ஐடி ஊழியர்கள்

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (34). சென்னையில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்த இவரது நண்பர் புஷ்பராஜ் (26). இவரும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் சங்கராந்தி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர்.

24
பீர் குடிக்கும் போட்டி
Image Credit : Asianet News

பீர் குடிக்கும் போட்டி

நீண்ட நாட்கள் பிறகு நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் பீர் மற்றும் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள மறைவான இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது நண்பர்களிடையே யார் அதிக பீர் குடிப்பது என்ற போட்டி வைக்கப்பட்டது. இதில் மணிக்குமார் புஷ்பராஜ் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு பீர் குடித்தனர்.

Related Articles

Related image1
நாட்டையே உலுக்கிய சம்பவம்... அவதூறு பரப்பிய பெண்; அவமானத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தீபக்
Related image2
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
34
4.30 மணிநேரத்தில் 19 பீர்
Image Credit : Asianet News

4.30 மணிநேரத்தில் 19 பீர்

அதாவது மதியம் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை 19 பீர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் திடீரென மயங்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மணிக்குமார் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் புஷ்பராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

44
அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு
Image Credit : Asianet News

அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அதிகப்படியான மது அருந்தியதே உயிரிழப்புக்கு காரணம் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் பீர் குடித்த மேலும் 4 பேர் நலமுடன் உள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தகவல் தொழில்நுட்பத் துறை
இந்தியா
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்! நாளை முதல் சுங்க கட்டணம் அதிரடி குறைப்பு.. எந்தெந்த சாலைகள் தெரியுமா..?
Recommended image2
இந்தியா ஒரு மத நாடாக மாறும்... இஸ்லாமியர்களுக்கு விசுவாச சான்றிதழ் தேவையில்லை.. ஓவைசி சரவெடி..!
Recommended image3
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
Related Stories
Recommended image1
நாட்டையே உலுக்கிய சம்பவம்... அவதூறு பரப்பிய பெண்; அவமானத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தீபக்
Recommended image2
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved