MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சென்னை டூ ஹவுரா மின்னல் வேகத்தில் போகலாம்! 'அம்ரித் பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் எப்போது இயக்கம்?

சென்னை டூ ஹவுரா மின்னல் வேகத்தில் போகலாம்! 'அம்ரித் பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் எப்போது இயக்கம்?

சென்னை டூ ஹவுரா இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் புறப்படும் நேரம், டிக்கெட் விலை உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
Published : May 06 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai to Howrah Amrit Bharat Express Train

Chennai to Howrah Amrit Bharat Express Train

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

24
சென்னை-ஹவுரா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரம், வழித்தடம்

சென்னை-ஹவுரா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரம், வழித்தடம்

மேலும் வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாட்டின் அதிவேக ரயில்களில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் இடம்பிடிக்க உள்ளது. இந்தியன் ரயில்வே 2025-26 நிதியாண்டில் பல்வேறு வழித்தடங்களில் 50 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் சென்னை மற்றும் ஹவுரா இடையே ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

ஹவுரா-சென்னை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினம் வழியாக பயணித்து வெறும் 26 மணி நேரத்திற்குள் 1,662 கி.மீ தூரத்தை கடக்கும். இந்த ரயில் ஹவுராவிலிருந்து சென்னைக்கு கோரக்பூர் சந்திப்பு, பாலேஷ்வர், பத்ராக், கட்டாக், புவனேஸ்வர், குர்தா சாலை சந்திப்பு, விஜயநகர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா சந்திப்பு, தெனாலி சந்திப்பு, ஓங்கோல் மற்றும் கூடூர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

Related Articles

Related image1
சென்னை டூ ராமேஸ்வரம் 8 மணி நேரத்தில் போகலாம்! 'வந்தே பாரத்' ரயில் குறித்து குட் நியூஸ்!
Related image2
ரயில்வே வெயிட் லிஸ்ட் டிக்கெட் விதிகளில் மாற்றம்
34
சென்னை-ஹவுரா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் டிக்கெட் கட்டணம்

சென்னை-ஹவுரா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் டிக்கெட் கட்டணம்

ஹவுராவிலிருந்து சென்னைக்கு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் அதிகப்பட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது. ஹவுரா-சென்னை சென்ட்ரல் ஹவுரா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் பொது வகுப்பு பெட்டிகள் இருக்கும். ஹவுரா சென்னை இடையேயான ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டின் விலை தோராயமாக ரூ.800 ஆகும்.
 

44
சென்னை-ஹவுரா ரயில் புறப்படும் நேரம்

சென்னை-ஹவுரா ரயில் புறப்படும் நேரம்

ஹவுராவிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு 26 மணி நேர பயணத்துக்கு பிறகு  அதிகாலை 1:00 மணிக்கு சென்னையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுமார்க்கமாக சென்னை-ஹவுரா அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6 மணிக்கு பயணத்தைத் தொடங்கி மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஹவுராவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்! நாளை முதல் சுங்க கட்டணம் அதிரடி குறைப்பு.. எந்தெந்த சாலைகள் தெரியுமா..?
Recommended image2
இந்தியா ஒரு மத நாடாக மாறும்... இஸ்லாமியர்களுக்கு விசுவாச சான்றிதழ் தேவையில்லை.. ஓவைசி சரவெடி..!
Recommended image3
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
Related Stories
Recommended image1
சென்னை டூ ராமேஸ்வரம் 8 மணி நேரத்தில் போகலாம்! 'வந்தே பாரத்' ரயில் குறித்து குட் நியூஸ்!
Recommended image2
ரயில்வே வெயிட் லிஸ்ட் டிக்கெட் விதிகளில் மாற்றம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved