MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை டூ ராமேஸ்வரம் 8 மணி நேரத்தில் போகலாம்! 'வந்தே பாரத்' ரயில் குறித்து குட் நியூஸ்!

சென்னை டூ ராமேஸ்வரம் 8 மணி நேரத்தில் போகலாம்! 'வந்தே பாரத்' ரயில் குறித்து குட் நியூஸ்!

சென்னை மற்றும் ராமேஸ்வரம் இடையே பாம்பன் பாலம் வழியாக இயக்கப்படவுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த டிக்கெட் கட்டணம், பயண நேர அட்டவணை உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 02 2025, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Vande Bharat Express: Chennai - Rameswaram Timetable, Fare: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் திறந்து வைத்தார். பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்தே அனைத்து ரயில்களும் புறப்பட்டு செல்கின்றன. 

24
Chennai-Rameswaram Vande Bharat Express

Chennai-Rameswaram Vande Bharat Express

சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் 

ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில், ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில், ராமேஸ்வரம்-புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-அயோத்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் அங்கு இருந்து புறப்படுகின்றன. பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவின்போது ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்துக்கு புதிய ரயில் விடப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 
 

Related Articles

Related image1
சென்னை டூ திருச்சி இனி ஜெட் வேகத்தில் பறக்கலாம்! ரயில்வே சொன்ன குட் நியூஸ்!
Related image2
வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் ஈஸியா டிக்கெட் கன்பார்ம் பண்ணலாம்! இதோ டிரிக்ஸ்!
34
Chennai-Rameswaram Train

Chennai-Rameswaram Train

விரைவில் அறிவிப்பு 

இது தொடர்பாக தமிழக எம்.பி.க்களும் ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு மொத்தம் 600 கிமீ தூரம் உள்ளது. இப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் 'சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' ரயில் 10.25 மணி நேரங்களில் ராமேஸ்வரம் சென்றடைகிறது.

எந்தெந்த இடங்களில் நிற்கும்?

அதே வேளையில் வந்தே பாரத் மணிக்கு 160 கிமீ வேகத்தில் அதிவேகமாக செல்லக்கூடியது என்பதால் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 8 அல்லது 8.30  மணி நேரங்களில் சென்று விடும். வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வந்தே பாரத் ரயில்களை போல் இதிலும் 7 ஏசி சேர் கார், 1 எக்ஸிக்யூடிவ் சேர் கார் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

44
Chennai-Rameswaram Vande Bharat TimeTable

Chennai-Rameswaram Vande Bharat TimeTable

பயண கட்டணம் எவ்வளவு?

சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் காரில் 1,400 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 2,400 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் வாரத்தின் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பயண நேர அட்டவணையை பொறுத்தவரை காலை 5.30 அல்லது 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 அல்லது 3 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். பின்பு அங்கு இருந்து புறப்பட்டு இரவில் சென்னை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரயில்
இந்திய இரயில்வே
பாம்பன் பாலம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
சென்னை டூ திருச்சி இனி ஜெட் வேகத்தில் பறக்கலாம்! ரயில்வே சொன்ன குட் நியூஸ்!
Recommended image2
வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் ஈஸியா டிக்கெட் கன்பார்ம் பண்ணலாம்! இதோ டிரிக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved